Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 14 மே, 2021

அருள்மிகு ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்


அமைவிடம் :

தமிழ்நாடு கும்பகோணம் நகரின் மையப்பகுதியில் ஆதி கும்பேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற தென்கரை தலங்களில் இது 26வது தலமாகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது விஷ்ணு சக்தி பீடம், மந்திரிணி சக்தி பீடமாகும்.

மாவட்டம்

அருள்மிகு ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.

எப்படி செல்வது? 

தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.

கோயில் சிறப்பு

ஒரு சமயம் பிரளயம் ஏற்பட்டபோது அமிர்த கும்பம் அடங்கிய கலசம் பிரளயத்தில் மிதந்து வந்து இங்கு தங்கியது. குடம் தங்கிய இடமாதலால் இத்தலம் 'குடமூக்கு" என்று பெயர் பெற்றது. 

இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்புரிகிறார். இவர் கீழே பருத்தும், மேலே செல்ல செல்ல ஊசி வடிவிலும் காணப்படுகிறார். இவ்வடிவமானது ஒரு குடவடிவம் போல் இருக்கும்.

இறைவன் கும்பேஸ்வரர் மண்ணால் ஆன குடவடிவம் உடையவர் என்பதால் தங்கக் கவசம் சாற்றியே அபிஷேகம் நடைபெறுகிறது. இக்கோயிலில் கல் நாதஸ்வரம் இருக்கிறது.

காசியில் பிறந்தோர் பாவம் கும்பகோணத்தில் போகும், கும்பகோணத்தில் பிறந்தோர் பாவம் மகாமகக் குளத்தில் நீராடினால் போகும் என்று புராணங்கள் கூறுகின்றன.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் மாசி மக தினத்தன்று இக்கோயில் சுவாமி இடப வாகனத்தில் மகாமக குளத்திற்கு எழுந்தருளி தீர்த்தவாரி அளிப்பார்.

கோயில் திருவிழா

மாசி மகத்தன்று மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். பங்குனி மாதத்தில் மகாமக குளத்தில் தெப்பத்திருவிழாவும், சித்திரையில் சப்தஸ்தானம் என்ற நிகழ்ச்சியும் நடக்கிறது. வைகாசியில் திருக்கல்யாணம், ஆனியில் திருமஞ்சனம், ஆடியில் பதினெட்டாம் பெருக்கு, ஆடிப்பூரம், பங்குனித்திருவிழா ஆகியவை கொண்டாடப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமக திருவிழா ஆதி கும்பேஸ்வரர் கோயிலின் சார்பிலேயே நடத்தப்படும். தமிழகத்தின் மிகப்பெரிய திருவிழா இது.

வேண்டுதல்

கல்வியில் சிறந்து விளங்க, புதிய தொழில் துவங்க, திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் என அனைத்து வேண்டுதல்களும் வைக்கப்படுகிறது. குபேர வாழ்வு வாழ விரும்புபவர்கள் மங்கள நாயகிக்கு ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் செம்பருத்தி பூவால் அலங்காரம் செய்து அர்ச்சனை செய்தால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன் :

சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக