Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 7 மே, 2021

இலகு ரக Smart LPG சிலிண்டரை அறிமுகம் செய்தது IOCL: இதன் சிறப்புகள், நன்மைகள் இதோ

இலகு ரக Smart LPG சிலிண்டரை அறிமுகம் செய்தது IOCL: இதன் சிறப்புகள், நன்மைகள் இதோ


இந்தியன் ஆயில் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தியை அளித்துள்ளது. இந்தியன் ஆயில், எடை குறைவான ஃபைபராலான சிலிண்டர்களை அறிமுகம் செய்துள்ளது. 

இந்தியன் ஆயில் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தியை அளித்துள்ளது. இனி நீங்கள் நிறுவனத்திடமிருந்து குறைந்த எடையுள்ள மற்றும் வண்ணமயமான சிலிண்டர்களைப் பெறுவீர்கள். 

இந்த சிலிண்டர்கள் மாட்யூலர் சமயலறைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. எனினும், யார் வேண்டுமானாலும் அவற்றைப் பயன்படுத்தலாம். இந்த சிலிண்டரின் சிறப்பு என்னவென்றால், இதில் எவ்வளவு எரிவாயு உள்ளது, எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். இந்த சிலிண்டரின் நன்மைகளைப் பற்றி இங்கே காணலாம்.

இந்தியன் ஆயில் (Indian Oil) ட்வீட் மூலம் இந்த சிலிண்டர் பற்றிய தகவல்களை வழங்கியுள்ளது. இது உங்கள் மாட்யூலர் சமையலறைக்கு சரியான பொருத்தமாக இருக்கும் என்று ட்வீட்டில் எழுதப்பட்டுள்ளது.

Here's a perfect match for your modular kitchen. Aesthetically designed, the new #Indane Composite LPG Cylinder is currently available in Hyderabad and Delhi. Contact your nearest Indane distributor for more details. #LPG #CompositeCylinder pic.twitter.com/tS5xOI1Bpv

— Indian Oil Corp Ltd (@IndianOilcl) May 5, 2021

இந்த சிலிண்டர் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய இந்திய காம்போசிட் எல்பிஜி சிலிண்டர் தற்போது ஹைதராபாத் மற்றும் டெல்லியில் கிடைக்கிறது. வரும் காலங்களில் இது மற்ற இடங்களிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது பற்றிய மேலும் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள இந்தேன் விநியோகஸ்தரை தொடர்பு கொள்ளலாம்.

5 மற்றும் 10 கிலோ எடையில் இந்த சிலிண்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன 

ஃபைபரால் செய்யப்பட்ட காம்போசிட் எல்.பி.ஜி சிலிண்டர்கள் (LPG Cylinder) 5 கிலோ மற்றும் 10 கிலோ எடையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தற்போது நாம் வீடுகளில் பயன்படுத்தும் இரும்பு சிலிண்டர்களில் சுமார் 14.2 கிலோ எரிவாயு உள்ளது. முதன்முறையாக ஃபைபரால் ஆன காம்போசிட் சிலிண்டர்கள் மக்களுக்கு வழங்கப்படும் என நிறுவனம் கூறுகிறது.
இந்த சிலிண்டரின் நன்மைகள்-
- இவை மிகவும் குறைவான எடையுள்ள வண்ணமயமான எரிவாயு சிலிண்டர்களாகும். 
- இப்போது உள்ள இரும்பு சிலிண்டர்களை விட இவை சுமார் 50 சதவீதம் இலகுவாக இருக்கும்.
- ஃபைபராலான காம்போசிட் சிலிண்டர்கள் மிகவும் பாதுகாப்பானவையாகவும் இருக்கும்.
- ஃபைபராலான காம்போசிட் சிலிண்டர்களில் அதிகபட்சம் 10 கிலோ எரிவாயு இருக்கும்.
- சிலிண்டரின் சில பகுதிகள் வெளிப்படையானதாக இருக்கும். இதன் காரணமாக சிலிண்டரில் எவ்வளவு எரிவாயு உள்ளது என்பதை நுகர்வோர் எளிதாக அறிந்துகொள்ள முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக