கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடும் நிலை ஏற்பட்டது. மாணவர்களின் நலன்கருதி பள்ளி, கல்லூரிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுக்கத் தொடங்கியது. இதன்மூலம் வழக்கமான பகுப்புகள் மேற்கொள்ளும் முறை முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டது. மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கு தயாராகினர்.
தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
அதேபோல் அரசு மற்ரும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் விநியோகம் தொடங்கியுள்ள நிலையில், 1-12 ஆம் வகுப்புகளில் உள்ள மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட வேண்டிய பாடங்களின் விரிவான அட்டவணையை மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கல்வி டிவி அணுகல் விவரம்
வெளியான அட்டவணையை https://www.kalvitholaikaatchi.com என்ற தளத்தில் பார்க்கலாம். கல்வி டிவியில் ஒளிபரப்பப்படும் பாடங்கள் குறித்து மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடங்கள் குறித்து விழிப்புணர்வையும் புரிதல்களையும் மாணவர்களுக்கு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்வி டிவியில் மாணவர்கள் நிகழ்ச்சிகள்
கல்வி டிவியில் மாணவர்கள் நிகழ்ச்சிகள் பார்ப்பதையும் கற்றுக் கொள்வதையும் உறுதி செய்ய பள்ளிகளுக்கு அறிவுறுத்துமாறு முதன்மை கல்வி அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். மேலும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது கேள்வியாக இருக்கும்பட்சத்தில் கல்வித் தொலைக்காட்சி வாயிலாக கற்றல் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி மற்றும் டிவி அணுகல் விவரம்
எத்தனை மாணவர்களுக்கு தொலைக்காட்சி மற்றும் டிவி அணுகலை மேற்கொள்ளும் வசதி இருக்கிறது என்பதையும் கல்விடிவி, மின்னணு சாதனங்கள் மற்றும் இணைய அணுகல் மேற்கொள்ள வசதி இல்லாத மாணவர்களுக்கு கல்விகற்க மாற்று ஏற்பாடு செய்து கொடுக்கும்படி பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த உத்தரவு
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த உத்தரவில், ஆன்லைன் வகுப்புகளுக்கு முறையான வழிகாட்டுதல்கள் வகுக்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை, கல்லூரி கல்வி இயக்கனர், சைபர் கிரைம், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவு அதிகாரிகள், உளவியல் நிபுணர்கள் ஆகிய உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்க உத்தரவிட்டுள்ளார்.
பள்ளி நிர்வாகம் வீடியோவாக பதிவு செய்ய வேண்டும்
இனி வரும் நாட்களில் ஆன்லைன் வகுப்புகளை பள்ளி நிர்வாகம் வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலு்ம பதிவு செய்யப்பட்ட ஆன்லைன் வகுப்பு வீடியோக்களை பள்ளி நிர்வாகம், பெற்றோர், ஆசிரியர் பிரதிநிதிகள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டார்.
முதலமைச்சர் உத்தரவு
மேலும் கல்வி நிறுவனங்களில் நடக்கும் பாலியல் அத்துமீறல்களை தடுக்கும் வகையிலான பரிந்துரைகளை வாரத்திற்குள் தயாரிக்க கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோல் ஆன்லைன் வகுப்புகளில் முறையில்லாமல் நடந்துக் கொள்வோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் உத்தரவிட்டார். மேலும் மாணவ, மாணவிகள் புகார் அளிக்க இலவச உதவி எண்களை உருவாக்கவும் அறிவுறுத்தினார். இதில் வரும் புகார்களை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.
பள்ளி கல்லூரிகள் மூடும் நிலை
கொரோனா வைரஸ் பரவலையடுத்து பள்ளி கல்லூரிகள் மூடும் நிலை ஏற்பட்டது. மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகளை தொடர்ந்தனர். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வீடியோ கால் மூலமாக வகுப்புகளை எடுத்து வந்தனர். கொரோனா பரவல் கொஞ்சம் கட்டுக்குள் வந்த நிலையில் பள்ளி, கல்லூரிகள் மெதுவாக கட்டுப்பாடுகளுடன் திறக்கும் நிலைக்கு வந்தது.
தளர்வுகள் அறிவிக்கும் தமிழக அரசு
இருப்பினும் கொரோனா பரவல் இரண்டாம் அலை தீவிரம் குறைந்து வருகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. மத்திய மாநில அரசுகள் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பள்ளி, கல்லூரிகள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் மாணவர்களின் படிப்புகள் என்னவாகும் என்பது கேள்விக்குறியானது. இதையடுத்து மாணவர்களின் நலன் கருதி பள்ளி கல்லூரிகள் ஆன்லைன் வகுப்பு எடுத்து வருகிறது. மாணவர்களுக்கு சில பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் எடுத்து வருகின்றனர். அதேபோல் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் வலியுறித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக