லாவா ப்ரோபட்ஸ் TWS இயர்பட்ஸ் சாதனம் ஆன்லைனில் வாங்க கிடைக்கிறது. இதற்கான காத்திருப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது! லாவா இன்டர்நேஷனல் ட்ரூலி வயர்லெஸ் பிரிவில் நுழைவதை அறிவித்துள்ளது. இந்த சாதனம் தற்பொழுது அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற மின்வணிக வலைத்தளங்களில் அறிமுக சலுகையாக வெறும் 1 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வெறும் ரூ.1 என்ற விலையில் புதிய லாவா ப்ரோபட்ஸ் சாதனம்
லாவா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த சிறப்பு சலுகை ஜூன் 24 ஆம் தேதி மதியம் 12.00 மணி முதல் துவங்குகிறது. இந்த சலுகை ஸ்டாக் இருப்பு நீடிக்கும் வரை செல்லுபடியாகும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. சிறப்பு அறிமுக சலுகைக்குப் பிறகு, லாவா ப்ரோபட்ஸ் சாதனம் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் இ-ஸ்டோர் தளங்கள் வழியாக ரூ .2,199 என்ற விலைக்குக் கிடைக்கும் என்று லாவா நிறுவனம் கூறியுள்ளது.
லாவா ப்ரோபட்ஸ் சிறப்பம்சம்
லாவா ப்ரோபட்ஸ் 11.6 மிமீ மேம்பட்ட டிரைவர்கள் மற்றும் மீடியா டெக் ஏரோஹா சிப்செட் ஆகியவற்றால் இயங்குகிறது. இது சிக்கல் இல்லாத வயர்கள் கொண்ட சாதனத்துடன் பயனர்களுக்கு ஆழ்ந்த அனுபவத்தை வழங்குகிறது. சிறிய அளவு இருந்தபோதிலும், இயர்பட்ஸ்கள் டீப் பாஸுடன் சக்திவாய்ந்த ஒலியை வழங்குகின்றன மற்றும் அழைப்புகளின் போது வாய்ஸ் டிஸ்டார்ட்ஷன் இல்லாமல் இருப்பதாய் உறுதி செய்கிறது.
500 mAh கேஸ் பேட்டரி
ப்ரோபட்ஸ் 25 மணிநேர நீண்ட இசை விளையாட்டு நேரத்தை வழங்குகிறது. இதன் ஒவ்வொரு இயர்பட்ஸ் சாதனமும் 55 mAh பேட்டரி உடன் மற்றும் 500 mAh கேஸ் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. உங்களுக்குப் பிடித்த இசையை ரசிக்கும்போது சார்ஜ் வேகமாக இழக்காமல் இருப்பதை ப்ரோபட்ஸின் நீண்ட பேட்டரி ஆயுள் உறுதி செய்கிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
வேக் அண்ட் பேர் டெக்னாலஜி
'வேக் அண்ட் பேர் டெக்னாலஜி' உடன் வந்துள்ளன, இது இயர்பட்ஸ் சாதனத்தைச் சக்தி செலுத்துகிறது மற்றும் கேஸ் மூடி திறந்தவுடன் இணைப்பு பயன்முறையில் நுழைகிறது. இது சமீபத்திய புளூடூத் வி 5.0 ஐ கொண்டுள்ளது, இது தடையற்ற மற்றும் உடனடி இணைப்பை வழங்குகிறது. ப்ரோபட்ஸ் ஐபிஎக்ஸ் 5 நீர் மற்றும் வியர்வை எதிர்ப்பு ஆகிய அம்சத்தைக் கொண்டுள்ளது. மேலும் இது வாய்ஸ் அசிஸ்டன்ட் அனுபவத்தை அணுகப் பயனர்களுக்கு உதவுகிறது.இது ஒரு வருட உத்தரவாதத்துடன் வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக