விஐ ரூ.447 விலையில் புது திட்டம் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோவுடன் போட்டிப்போடும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களின் முழு விவரங்கள் மற்றும் ஒப்பீடுகளை பார்க்கலாம்.
விஐ ரூ.447 ப்ரீபெய்ட் திட்டம்
விஐ (வோடபோன் ஐடியா) ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் விஐ இரண்டு முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் நேரடியாக போட்டிப்போட தொடங்குகிறது. இந்த திட்டத்தில் பயனர்கள் தடையின்றி வழங்கப்பட்டுள்ள தரவை பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள்.
விஐ ரூ.447 ப்ரீபெய்ட் திட்ட விவரங்கள்
புதிதாக தொடங்கப்பட்ட திட்டம் ரூ.447 விலையில் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் 50 ஜிபி தரவு டேட்டா கிடைக்கிறது. அதோடு இந்த திட்டத்தில் வழங்கப்படும் டேட்டா பயனர்கள் தினசரி வரம்பு என்ற தடையின்றி பயன்படுத்தலாம். இந்த திட்டத்தில் கூடுதலாக பயனர்கள் மொத்தம் 50 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகிறது. அதோடு இந்த திட்டத்தில் வரம்பற்ற குரலழைப்புகளை நிறுவனம் வழங்குகிறது. மேலும் இந்த திட்டங்கள் 60 நாட்களுக்கு செல்லுபடியாகும். மேலும் இந்த திட்டத்தில் விஐ மூவிஸ், டிவி கிளாசிக் அணுகலையும் வழங்குகிறது. இதன்மூலம் பயனர்கள் செய்திகள், திரைப்படங்கள் உள்ளிட்டவற்றை பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
விஐ திட்டம் Vs ரிலையன்ஸ் ஜியோ திட்டம்: விவரங்கள்
ஜியோ வழங்கும் திட்டம் குறித்து பார்க்கையில், இதன் விலையும் ரூ.447 ஆக இருக்கிறது. இந்த திட்டத்தில் பயனர்களுக்கு மொத்தமாக 50 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. நிறுவனம் வழங்கும் திட்டத்தை பயனர்கள் தடையின்றி பயன்படுத்தலாம். அதோடு வரம்பற்ற குரலழைப்பு சலுகையையும் இதில் வழங்கப்படுகிறது. அதோடு இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ்களும் வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது 60 நாட்கள் வேலிடிட்டியோடு வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் விஐ
விஐ ப்ரீபெய்ட் திட்டம் நேரடியாக ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் திட்டத்துடன் மோதுகிறது. விஐ அறிவித்த திட்டமும் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் திட்டமும் ஒரேமாதிரியான சலுகைகளை வழங்குகிறது. இரண்டுக்கும் ஏணைய சலுகைகள் ஒரேமாதிரியாக இருந்தாலும் ஓடிடி அணுகல் மட்டுமே மாறுபடுகிறது, ஜியோ வழங்கும் திட்டத்தில் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ நியூஸ், ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் பயன்பாடுகளுக்கான அணுகல் ஆகியவை அடங்கும்.
ஏர்டெல் திட்டம் Vs விஐ திட்டம்
அதேபோல் ஏர்டெல் வழங்கும் திட்டம் குறித்து பார்க்கையில், இந்த திட்டம் சற்று உயர்ந்ததாக இருக்கிறது. இந்த திட்டத்தின் விலை ரூ.456 ஆக இருக்கிறது. இந்த திட்டத்தில் மொத்தம் 50 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வரம்பற்ற குரலழைப்புகளை வழங்குகிறது. மேலும் இந்த திட்டமானது 60 நாட்கள் செல்லுபடியாகிறது. இந்த திட்டமானது ஏர்டெஸ் எக்ஸ்ட்ரீம் ப்ரீமியம் அணுகலை வழங்குகிறது.
மாறுபடும் ஓடிடி அணுகல்
விஐ, ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் ரூ.447 விலையில் வழங்கும் அதே திட்டத்தை ஏர்டெல் கூடுதல் விலையில் வழங்குகிறது. மூன்று நிறுவனங்கள் விலை குறித்து அறிந்தோம். இதில் இருக்கும் மாற்றம் குறித்து பார்க்கையில் ஓடிடி அணுகல் உட்பட கூடுதல் சலுகைகளே ஆகும். ஏர்டெல் வழங்கும் திட்டத்தில் 30 நாட்கள் அமேசான் பிரைமிற்கான அணுகலை வழங்குகிறது. அதோடு ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ரீமியம், இலவச ஹலோ டியூன்கள், அப்பல்லோ 24/7 அணுகல், விங்க் மியூசிக், இலவச ஷா அகாடமி படிப்புகள் ஒரு வருட அணுகல், ரூ.100 பாஸ்டேக் கேஷ்பேக் ஆகியவை வழங்கப்படுகிறது.
கடும் போட்டியில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்
விஐ மற்றும் ரிலையன்ஸ் ஜியோ பேக்கிற்கு இடையில் கடும் போட்டி இருப்பதை தெளிவாகக் காட்டுகிறது. காரணம், இரண்டு நிறுவனங்களும் ஒரே மாதிரியான திட்டங்களை அறிமுகம் செய்கிறது. ஜியோ மற்றும் விஐ-க்கு இடையில் நடக்கும் போட்டியில் ஓடிடி அணுகல் மட்டுமே வித்தியாசமாக இருக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக