செவ்வாய், 15 ஜூன், 2021

2021 கேது பெயர்ச்சியால் உங்க ராசிக்கு எப்படி இருக்கப் போகுதுன்னு தெரிஞ்சுக்கணுமா?

 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் : சும்மாவே சீன் போடும் சிம்ம ராசி அன்பர்களே!! -  Seithipunal
வேத ஜோதிடத்தில், கேது ஒரு நிழல் கிரகமாக கருதப்படுகிறது. ஆன்மீகத்தைப் பொறுத்தவரை, கேது மிகவும் முக்கியமான கிரகம். ஒருவரது ஜாதகத்தில் கேது சாதகமான நிலையில் இருந்தால், அது பெரிய அதிர்ஷ்டத்தை வழங்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். கேது பெயர்ச்சிப் பற்றி பேசும் போது, பொதுவாக கேது ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் ஆகும்.

ஆனால் இந்த வருடம் கேது பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறாமல், அனுஷம் நட்சத்திரத்திற்கு இடம் பெயர்கிறார். கேது பகவானின் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைத் தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு கேது சாதகமற்ற நிலையில் இருப்பதால் வாழ்க்கையில் சில சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும். தொழில் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். பணியிடத்தில் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கும். இக்காலத்தில் பணத்தை இழக்கக்கூடும் என்பதால் அது மன அழுத்தத்திற்கு ஏற்படுத்தும். எனவே நிதி விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருங்கள். உங்கள் தந்தையின் உடல்நிலை சற்று பாதிக்கப்படலாம். நீங்கள் மூல நோயால் பாதிக்கப்படலாம். எனவே ஆரோக்கிய பிரச்சனைகளை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இக்காலம் கலவையான முடிவுகளைத் தரும். இப்பெயர்ச்சியாக, இந்த ராசிக்காரர்கள் பெயரையும் புகழையும் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணை அவர்களின் தொழில் வாழ்க்கையில் பெரிய வெற்றியைக் காண்பார்கள். இருப்பினும் அவர்களின் ஆரோக்கியம் சரியாக இருக்காது. இந்த ராசிக்காரர்களும் தங்களின் ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் திருமணமான தம்பதியர்களுக்கு இடையே சூடான வாதங்கள் ஏற்படலாம். ஏற்கனவே உறவில் மோதல்களைக் கொண்டிருப்பவர்கள், அமைதியாகவும், பொறுமையாகவும் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். வியாபாரிகள் மற்றும் நீண்ட கால முதலீடு செய்தவர்கள் நீண்ட தூர பயணத்தால் பயனடையலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த கேது பெயர்ச்சி பல வழிகளில் பலனளிக்கும். கடன் பிரச்சனைகள் நீங்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சாதகமான காலம் அல்ல. ஏதேனும் உடல்நல பிரச்சனைகளால் அவதிப்படலாம். உங்களின் பணிகள் தடைப்படக்கூடும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. தொழில் வாழ்க்கையில் சில சிக்கல்களை எதிர்கொள்வீர்கள். இருப்பினும் கடினமாக உழைப்பதைக் கைவிடாமல் உழைத்தால், ஓரளவு வெற்றியைக் காணலாம். மாணவர்கள் படிப்பில் சிரமங்களை சந்திக்க நேரிடும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த கேது இடமாற்றம், ஆன்மீக நடவடிக்கைகளில் நாட்டத்தை அதிகரிக்கும். திருமணமானவர்களுக்கு சில நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணை அவர்களது தொழில் வாழ்க்கையில் வெற்றியைப் பெறுவார்கள். முடிவுகளை எடுக்கும்போது சில சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே எந்த ஒரு பெரிய முடிவையும் அவசரமாக எடுக்க வேண்டாம். இல்லையெனில் இது உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். உடல்நலம் தொடர்பான சில சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

சிம்மம்

அனுஷம் செல்லும் கேதுவால், சிம்ம ராசிக்காரர்கள் குடும்பத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். குடும்பச் சூழலில் அதிக மன அழுத்தம் இருக்கும். இது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குறிப்பாக உங்கள் தாயின் உடல்நலம் மோசமடைய வழிவகுக்கும். இந்த நேரத்தில், அவர்களின் நடத்தையிலும் சில முரட்டுத்தனங்களைக் காணலாம். எனவே அவர்களுடன் நல்ல உறவைப் பேண முயற்சிக்கவும், அவர்களுக்கு ஏதேனும் சிக்கல் இருந்தால் அவர்களை கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கைத் துணை அவர்களின் பணியிடத்தில் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். எனவே அவர்களுக்கு தைரியத்தை அளிக்க ஊக்குவியுங்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. உங்களின் தொழில் வாழ்க்கை ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். எனவே கவனமாக இருங்கள். சொத்து தொடர்பான தகராறில் சிக்கிக்கொள்ளும் அபாயம் உண்டு. மொத்தத்தில் குடும்ப வாழ்க்கையில் சில அதிருப்தி இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு, இந்த கேதுவின் பெயர்ச்சி வாழ்க்கையில் ஒரு வெற்றியை தரும். இக்காலம் உங்கள் தைரியத்தையும் சக்தியையும் அதிகரிக்கும். வியாபாரத்தில் எடுக்கப்படும் சில முக்கியமான முவுகள் உங்கள் வணிகத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வதில் மிக முக்கியமானது என்பதை நிரூபிக்கும். உங்கள் உடன்பிறப்புகளுடனான உறவுகள் மோசமடையக்கூடும். காதலிப்பவர்கள், தங்கள் காதலில் வெற்றிபெற நல்ல வாய்ப்புகள் இருக்கும். மேலும் உங்கள் காதலுக்காக எதையும் செய்ய நீங்கள் தயாராக இருப்பீர்கள். திருமணமாகாமல் சிங்கிளாக இருப்பவர்கள், மனதிற்கு பிடித்தவரை சந்திப்பீர்கள். மாணவர்கள் நல்ல நன்மையைப் பெறுவார்கள். போட்டித் தேர்வுகளில் நல்ல வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. லேசான உடல்நலப் பிரச்சினைகள் உங்களைத் தொந்தரவு செய்யலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த கேது பெயர்ச்சி கலவையான முடிவுகளைத் தரும். ஒருபுறம், சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். மறுபுறம், உங்களின் மோசமான மற்றும் கசப்பான பேச்சு காரணமாக உங்கள் உறவும் வேலையும் மோசமாக பாதிக்கப்படலாம். நீங்கள் திருமணமானவராக இருந்தால், திருமண வாழ்க்கையில் சில மன அழுத்தங்களைக் காண்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணை உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடல்நலப் பிரச்சினைகள் உங்களைத் தொந்தரவு செய்யக்கூடும் என்பதால் உங்கள் நலனைக் கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். உணவு தொடர்பான பிரச்சினைகள், வாய் தொடர்பான நோய்கள், வாய் புண்கள் அல்லது பல்வலி போன்றவை உங்களைத் தொந்தரவு செய்யலாம். கண் கோளாறு ஏற்படுவதற்கான வாய்ப்பும் இருக்கலாம். உங்கள் விவேகத்தை பயன்படுத்துவதால் நீங்கள் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.

விருச்சிகம்

கேது பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும். இக்காலத்தில் உங்கள் வார்த்தைகளை சுற்றியிருப்பவர்கள் நன்றாக புரிந்து கொள்ள மாட்டார்கள். தனிப்பட்ட முயற்சிகள் காரணமாக, வேலையில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும். உடன்பிறப்புகளின் நல்ல ஆதரவை நீங்கள் காண்பீர்கள். அதன் காரணமாக நீங்கள் மிகவும் நிம்மதியாக இருப்பீர்கள். மனதில் நிறைய மத மற்றும் ஆன்மீக எண்ணங்கள் இருக்கும். நீங்கள் எப்போதாவது ஒரு வீட்டைக் கட்டுவது பற்றி நினைத்திருந்தால் அல்லது சில கட்டுமானப் பணிகளைச் செய்ய நினைத்திருந்தால், இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். மேலும் உங்கள் வேலையில் வெற்றி பெறுவீர்கள். குறுகிய தூர பயணங்களுக்கான வாய்ப்பும் உள்ளது. ஆனால் பயணத்தின் போது உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். இக்காலத்தில் உங்கள் மனதில் கோபத்தின் உணர்வுகள் அதிகமாக இருக்கலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். செலவுகள் அதிகரிப்பதால் சற்று கவலைப்படுவீர்கள். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் செலவினங்களைக் கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். ஏனெனில் இதன் காரணமாக உங்கள் நிதி நிலை பாதிக்கப்படலாம். இக்காலத்தில் உங்கள் உடல்நல பிரச்சனைகளும் செலவிற்கு முக்கிய காரணமாக மாறக்கூடும். ஆன்மீக விஷயங்களுக்கு நிறைய செலவு செய்வீர்கள். உங்களுக்கு தூக்கமின்மை, கண் கோளாறுகள் அல்லது தனிப்பட்ட உறவுகளில் பிரச்சினைகள் இருக்கலாம். காலில் எந்தவிதமான காயமும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கவனமாக இருங்கள். வாகனத்தை கவனமாக ஓட்டுங்கள். வாழ்க்கை துணையுடனான நெருக்கமான உறவுகள் பாதிக்கப்படலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த கேது பெயர்ச்சி சாதகமான முடிவுகளைத் தரும். இது உங்கள் நிதி நிலையை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உங்கள் முடங்கிய திட்டங்களை முடிக்க ஒரு வழிமுறையையும் உருவாக்கும். இக்காலத்தில் ​​உங்கள் நிதி நிலை மேம்படும். மேலும் உங்களில் பல விருப்பங்களும் நிறைவேறும். இது உங்களை மிகவும் நன்றாக உணர வைக்கும். நீங்கள் ஒரு புதிய தொழிலைத் தொடங்க விரும்பினால், இந்த நேரம் அதற்கு மிகவும் சாதகமாக இருக்கும். நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு இக்காலத்தில் உங்கள் மேலதிகாரிகளுடனான உங்கள் உறவுகள் இன்னும் சிறப்பாக மாறும். மேலும் வேலையில் உங்களுக்கு நன்மைகளும் கிடைக்கும்.

கும்பம்

கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கையில் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் வேலையை முடிப்பதில் சில சிக்கல்கள் எதிர்கொள்வீர்கள். ஆனால் நீங்கள் கடினமாக உழைப்பதில் கவனம் செலுத்தினால் தான், விஷயங்களை உங்களுக்கு சாதகமாக மாற்ற முடியும். நீங்கள் வெளிநாட்டில் எங்காவது வேலை செய்தால் அல்லது நீங்கள் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தால், இந்த நேரம் உங்களுக்கு நன்மை பயக்கும். அதிகப்படியான பணிச்சுமை காரணமாக நீங்கள் உங்களைப் பற்றி அலட்சியமாக இருக்கக்கூடும் என்பதால் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது அவசியம். கேதுவின் இந்த இடமாற்றத்தின் போது உங்கள் தந்தையுடனான உறவு பாதிக்கப்படலாம்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இது ஒரு அதிர்ஷ்மான காலம். சமூகத்தில் நற்பெயரைப் பெறுவதோடு மரியாதையுடன் நடத்தப்படுவீர்கள். கூடுதல் வருமானத்தை பெறுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் உங்களைத் தொந்தரவு செய்யும். உங்கள் உடல்நலம் மட்டுமல்ல, உங்கள் தந்தையின் ஆரோக்கியமும் பாதிக்கப்படலாம், எனவே அவருடைய ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். இக்காலத்தில் மேற்கொள்ளும் பயணத்தால் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். இந்த கேது பெயர்ச்சியால் உங்கள் உடன்பிறப்புகள் நிதி மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் பணியிடத்தில் நீங்கள் சரியாக வேலை செய்வதும், உங்கள் மேலதிகாரிகளுடன் நல்ல உறவைப் பேணுவதும் அவசியம், ஏனென்றால் இது வேலையில் ஒரு நல்ல நிலையை உருவாக்க உதவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்