Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 15 ஜூன், 2021

அட அப்படியா? ராமனின் தாய் சொன்ன வெற்றியின் ரகசியம்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------
கலக்கல் காமெடிகள்....!!
-------------------------------------
கந்தசாமி : சார்... என் பேரு கந்தசாமி.... சொந்த ஊரு பழனி...
ரங்கசாமி : அதுக்கென்ன இப்போ?
கந்தசாமி : ஆயிரம் ரூபா கடன் வேணும். ஊர் பேர் தெரியாதவனுக்கு எல்லாம் கடன் குடுக்க முடியாதுன்னு சொன்னீங்களே.. அதான் அறிமுகப்படுத்திக்கிட்டேன்.
ரங்கசாமி : 😏😏
-------------------------------------
பாபு : அந்த ஆள் மாடு மாதிரி ஓட்டல்ல உழைச்சாரு... ஆனா அவர வேலையை விட்டு தூக்கிட்டாங்க..
கோபு : ஏன்?
பாபு : அவரு எப்ப பார்த்தாலும் அசை போட்டுக்கிட்டே இருந்தாரே...!
கோபு : 😂😂
-------------------------------------
அட அப்படியா?
-------------------------------------
எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரோட்டீன்ஸ் மிக முக்கியம். புரோட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ் தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரோட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.

எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெல்ல வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள் தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.
-------------------------------------
வெற்றியின் ரகசியம்!!
-------------------------------------
நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் தன் இளம் வயதிலேயே சிறந்த அறிவாளியாக விளங்கினார். ஆனால் அவர் எந்த வேலையையும் ஒருநிலைப்படுத்தி செய்யவில்லை. ராமனின் போக்கை கண்ட அவரது தாய் மிகவும் வருந்தினார்.

ஒருமுறை அவள் ராமனை பூதக்கண்ணாடியை கொண்டு வரச் சொன்னாள், சில காகிதங்களை கீழே போட்டு, பூதக் கண்ணாடியை வெயிலில் காட்டினார்.

பூதக்கண்ணாடியைப் பிடித்த தாயின் கை அங்கும் இங்குமாய் அசைந்து கொண்டிருந்தது, நீண்ட நேரத்துக்குப் பின் தனது கையை பூதக்கண்ணாடியின் ஒளிகுவி மையம் காகிதத்தில் படுமாறு கவனமாகப் பிடித்தாள், சில நொடிகளில் காகிதம் தீப்பற்றியது. அதைக் கண்ட ராமன் மிகவும் ஆச்சரியப்பட்டார்.

அப்போது ராமனின் தாயார், ஒருமுகப்படுத்திய ஒளிக்கதிர்கள் தான் நெருப்பாகி காகிதத்தை எரிக்கும், ஒருமுகப்படுத்தாத ஒளிக்கதிரில் நெருப்பு உண்டாகாது. அதுபோல நீயும் உள்ளத்தை ஒருமுகப்படுத்தினால் எந்த வேலையிலும் வெற்றி அடையலாம். அதனால் மனதை ஒருமுகப்படுத்தி வேலையில் ஈடுபட பழகிக் கொள் என்றாள்.

ராமன் தாயின் வார்த்தைகளை மனதில் பதியவைத்துக் கொண்டார். அன்று முதல் மனதை ஒருமுகப்படுத்தி செயல்களைச் செய்யத் தொடங்கினார். பின்னாளில் உலகம் போற்றும் விஞ்ஞானியாகவும் பெயர் பெற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக