Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 15 ஜூன், 2021

ஜிமெயிலில் உங்களுக்கு தொல்லை தரும் இமெயிலை Block செய்வது எப்படி? சிம்பிள் டிப்ஸ்..!

 கூகுள் நிறுவனம் அண்மையில்


ஜிமெயில் சேவை பலருக்கும் உதவியாக இருக்கிறது என்றே கூறலாம். குறிப்பாக வங்கி சார்ந்த தகவல்கள் மற்றும் வேலைக்கு விண்ணப்பித்தல் போன்ற அனைத்து பரிமாற்றங்களுக்கும் இந்த ஜிமெயில் அதிகளவு உதவுகின்றன என்று தான் கூறவேண்டும்.

 

மேலும் லேப்டாப், ஸ்மார்ட்போன், டேப்லெட் என பல்வேறு சாதனங்களிலும் இந்த ஜிமெயில் வசதியை மிக அருமையாக பயன்படுத்த முடியம்.இந்த சேவை இலவசம் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் இது பயனர்களுக்கு மெயில்களுக்கான போதுமான ஸ்டோரேஜ் வழங்குகிறது மற்றும் நீங்கள் மெயிலை எளிதில் தேடிக் கண்டறிய, எளிதில் பதில் அனுப்ப என எல்லாவற்றிக்கும் அசத்தலான வசதியைக்
கொண்டுள்ளது இந்த ஜிமெயில் சேவை..

 

அதேபோல் கூகுள் நிறுவனம் அண்மையில் ஜிமெயில் சேவையில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்தது. அதாவது செக்கர் பிளஸ்(Checker Plus for Gmail), சிம்பிள் ஜிமெயில் நோட்ஸ் (Simple Gmail Notes), கிராமர்லி (Grammerly),சேன்பாக்ஸ் வசதி (Sanebox), பிரிஸ்கின் (Briskine), மெயில்டிராக் (MailTrack), டிக்டேசன் ஃபார் ஜிமெயில் ( Dictation for Gmail)உள்ளிட்ட அம்சங்களை தான் அறிமுகம் செய்தது. இந்த அம்சங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது குறிப்பாக மெயில்டிராக் எனும் அம்சம் நாம் எதிர்பார்க்கும் வகையில் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

மெயில்டிராக் (MailTrack)

அதன்படிஇந்த மெயில்டிராக்கை நீங்கள்இன்ஸ்டால் செய்தால் உங்களது மெயில் சென்றடைந்தது என்பதை அறிய ஒரு செக் மார்க்கும்,அது திறந்து பார்க்கப்பட்டதா என்பதைஅறிந்துகொள்ள இரண்டு செக்மார்க்கும் இருக்கும். இந்த வசதியின் மூலம் உங்களது மெயில் திறந்த பார்க்கப்பட்டதா என்பதை உறுதிபடுத்தமுடியும். ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நீங்கள் அனுப்பும்மெயில் சென்ட் வித்மெயில்டிராக் என்றஅடையாளத்துடன் செல்லும். ஒருவேளை 5 அமெரிக்க டாலர் கொடுத்து புரோ வெர்ஷனை இன்ஸ்டால் செய்தால் அந்த அடையாளம் இன்றிசெல்லும் என்றுகூறப்படுகிறது. கிட்டத்தட்ட லாபம் வரும் நோக்கத்தில் இந்த அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

 

அதேபோல் ஜிமெயிலில் உங்களுக்கு தொல்லை தரும் இமெயிலை block செய்யவும் வழி உள்ளது. அதற்கான வழிமுறைகளை நாம் இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

வழிமுறை-1

முதலில் உங்களது ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் மாடலில் உள்ள ஜிமெயில் பயன்பாட்டை திறக்கவும்

 

வழிமுறை-2

அடுத்து ஜிமெயில் உள்ள இன்பாக்ஸ்-இல் message-ஐ திறக்கவும்.

வழிமுறை-3

நீங்கள் மெசேஜ் கிளிக் செய்தவுடன் மேல் வலதுபுறத்தில் More எனும் விருப்பத்தைக் கிளக் செய்யவும்.

 

வழிமுறை-4

அதன்பின்னர் Block [Sender] எனும் விருப்பம் இருக்கும், இதை கிளிக் செய்வதன் மூலம் உங்களுக்கு தொல்லை தரும் இமெயிலை நிறுத்த முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக