வெள்ளி, 18 ஜூன், 2021

இனி சிவப்பு இல்ல பச்சை: பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்வது எப்படி?

பப்ஜி ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி ,நீங்கள் இறுதியாக பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியாவை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யலாம். இது டென்செண்டுடன் எந்த தொடர்பும் இல்லாத பப்ஜி மொபைல் இந்தியாவின் பதிப்பாக உள்ளது. இது தென்கொரிய ஹோல்டிங் நிறுவனமான கிராப்டனில் இருந்து நேரடியாக வருகிறது.


பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா

பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட பயனர்களுக்கு ஆரம்ப அணுகல் பீட்டாக கிடைக்கிறது. தங்கள் ஸ்மார்ட்போனில் இதை எவ்வாறு பதிவிறக்கம் செய்வதும் என்பது குறித்து பார்க்கலாம். முன்னதாக குறிப்பிட்டது போல், பேட்டில் கிரவுண்ட் மொபைல் இ்நதியா தற்போது ஆரம்ப அணுகல் மூலமாக கிடைக்கிறது.

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம்

தற்போதுவரை பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா, அனைவருக்கும் கிடைக்கவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட பயனர்கள் மட்டுமே கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியும். பீட்டா ஏபிகே தற்போது மூன்றாம் தரப்பு மூலங்கள் வழியாக கிடைக்கிறது. இது மிகவும் இணக்கமான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பதிவிறக்கம் செய்து நிறுவலாம்.

அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு

பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு தற்போது ஆரம்ப பீட்டா அணுகல் திட்டம் நிரம்பியிருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளது. பயனர்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இன்னும் சில நாட்களில் நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதே சமயத்தில் ஜூன் 18 ஆம் தேதி இந்த விளையாட்டு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும் என தற்போது கூறப்படுகிறது.

மூன்றாம் தரப்பு தளங்கள் மூலம் பதிவிறக்கம்

குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் மூன்றாம் தரப்பு தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யும்போது கவனமாக இருக்கவும். நிலையான பதிப்பு திறக்கும் வரை காத்திருக்கவும் அப்படி இல்லாதபட்சத்தில் மூன்றாம் தரப்பு வலைதளத்தில் மூலமாக மேற்கொள்ளலாம் ஆனால் இதில் கவனம் தேவை. இது பாதுகாப்பான முறையல்ல என்ற காரணத்தால் தாங்கள் இதுகுறித்து எந்த தகவலையும் பகிர இயலாது. இந்த விளையாட்டு கோப்பு சுமார் 800 எம்பி என கூறப்படுகிறது.

ஆன்லைனில் பகிரப்பட்ட ஸ்க்ரீன் ஷாட்கள்

பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா முதல் வெளியானது, ஆன்லைனில் பகிரப்பட்ட ஸ்க்ரீன் ஷாட்கள் மற்றும் வீடியோக்கள் குறித்து பார்க்கையில், இது பப்ஜி மொபைல் போல் தோற்றமளிக்கிறது. மேலும் இந்த வீடியோவில் சிவப்பு ரத்தத்திற்கு பதிலாக பச்சை ரத்தம் காண்பிக்கிறது. மேலும் இந்த விளையாட்டில் வரைபடம் இருக்கும் எனவும் இது பப்ஜியில் இருக்காது எனவும் கூறப்படுகிறது. அதேபோல் பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா விளையாட்டில் சர்வதேச பப்ஜி விளையாட்டு வீரர்களுடன் விளையாட இயலுமா என்பது குறித்த தகவல் இல்லை.
விரைவில் வெளியீட்டு தேதி இருக்கும்

பிரபல டிப்ஸ்டர் மற்றும் பப்ஜி மொபைல் குறித்து மேக்ஸ்டெர்ன் 18062021 என மொழிபெயர்க்கப்பட்ட பைனரி குறியீட்டை ட்வீட் செய்தார். இது குறித்த டுவீட்டை முதன்முதலில் ஐ.ஜி.என் இந்தியா கண்டறிந்து தெரிவித்தது. கூடுதலாக இந்த உள்ளடக்கத்தை உருவாக்கியவர் அபிஜித் அந்தரே வெளியிட்டார், அதில் ஜூன் மாதத்தில் எப்போதாவது இந்த வெளியீட்டு தேதி இருக்கும் என குறிப்பிட்டார்.

பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா பதிப்பு அளவு

பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியாவுக்கான பதிப்பு கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து கிடைக்கும். இந்த விளையாட்டானது 2 ஜிபி ரேம் கொண்ட ஆண்ட்ராய்டு 5.1.1 அல்லது அதற்கு மேல் உள்ள பதிப்பில் மட்டுமே இயங்கும் என கூறப்படுகிறது. பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா விளையாட்டு விரைவில் இந்தியாவில் தொடங்க உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதை நிறுவனம் பேஸ்புக்கில் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா என மாற்றி பதிவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்