விழுப்புரம் திருவக்கரை ஊரில் அமைந்துள்ளது அருள்மிகு சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில். தமிழ்நாட்டில் எத்தனையோ சிவாலயம் இருந்தாலும், காளி கோயில் இருந்தாலும் அவற்றில் மிகவும் பிரபலமான காளி கோயில் திருவக்கரை வக்கிரகாளி அம்மன் கோயில் ஆகும். இங்குள்ள காளி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
மாவட்டம் :
அருள்மிகு சந்திரமவுலீஸ்வரர் திருக்கோவில், திருவக்கரை, வானூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம்.
எப்படி செல்வது?
திண்டிவனத்திலிருந்து திருவக்கரைக்கு நேரடியாக பேருந்து வசதிகள் உள்ளது.
கோயில் சிறப்பு :
இத்திருக்கோவிலில் மூலவர் மூன்று முகலிங்கமாக காட்சி தருகின்றார். இது வேறு எங்கும் காணமுடியாத அற்புத திருக்காட்சி ஆகும்.
இங்கு காளி கோயிலின் எதிரில் மேற்கே ஆத்மலிங்கம் உள்ளது. இது கண்ட லிங்கம் என்றும் அழைக்கப்படும். இந்த லிங்கம் கோடை காலங்களில் குளிர்ச்சியாக இருக்கும். மழைக்காலங்களில் லிங்கத்தின் மேல் பகுதியில் முத்து முத்தான நீர்த்துளிகள் காணப்படும்.
பொதுவாக எல்லாக் கோயில்களிலும் சனி பகவான் வாகனமான காகம் அவருக்கு வலப்புறமாக இருப்பது வழக்கம். ஆனால் இங்கு வழக்கத்திற்கு மாறாக சனி பகவானுடைய இடது புறத்தில் அமைந்து வக்கிரமாக காட்சி தருகிறது.
இக்கோவிலில் எட்டு திருக்கரங்களுடன் அஷ்டபுஜ துர்க்கை காட்சி தருகின்றார்.
இங்கு வக்ரகாளியம்மன் சன்னதியின் கோபுர மண்டபத்திற்கு மேல் சூடம் ஏற்றுவார்கள். அந்த தீபத்தை தரிசனம் காணுவது இத்தலத்தின் முக்கிய விசேஷம் ஆகும்.
கோயில் திருவிழா :
மாதாந்திர பௌர்ணமி மற்றும் பிரதி அமாவாசை விழா, தை கிருத்திகை, சித்ரா பௌர்ணமி, ஆடி கிருத்திகை, கார்த்திகை தீபம், தை பூசம் மற்றும் காணும் பொங்கல், தமிழ் வருடப்பிறப்பில் திருக்குளத்தில் தெப்பத்திருவிழா மற்றும் பிரதோஷ போன்ற அனைத்து உற்சவங்களும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
வேண்டுதல் :
இங்கு மனநிம்மதி கிடைக்க, கிரக தோஷங்கள் நீங்க, காரியத் தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாக, பூர்வஜென்ம பாவங்கள் விலக, (வர்க்க தோசம்) புத்திர தோஷங்கள் விலக, பாவ தோஷங்களும் விலக சிவனை பிரார்த்திக்கிறார்கள்.
ஜாதக கிரக தோஷங்கள், வியாபாரத்தடை, உத்தியோகத் தடை நீங்கவும், திருமணம் ஆகாதவர்கள், குழந்தைபேறு இல்லாதவர்கள் இத்தலத்தின் மிக முக்கிய பிரசித்தி பெற்ற வக்ரகாளியம்மனை வணங்குகின்றனர்.
நேர்த்திக்கடன் :
திருமணத்தடை உள்ளவர்கள் தாலி காணிக்கை, புடவை சாற்றுதல், மாலை சாற்றுதல் ஆகியவற்றை நேர்த்திக்கடன்களாக செய்கின்றனர். குழந்தை வரம் இல்லாதவர்கள் தொட்டில் கட்டுதல், எடைக்கு எடை காசுபோடுதல் ஆகியவற்றை நேர்த்திக்கடன்களாக செய்கின்றனர். வியாபார விருத்தி வேண்டுவோர் திருப்பணிகள் செய்தல், மண்டபம் கட்டித்தருதல் ஆகியவற்றையும் செய்கிறார்கள்
அருள்தரும் ஆலயங்கள்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக