-------------------------------------
சிரிக்கலாம் வாங்க....!!
-------------------------------------
அமலா : இலவசம் என்றால் என் கணவர் எதையும் விட மாட்டார்...
விமலா : அப்படியா?..
அமலா : ஆமாம்! இப்ப பாரேன்... இலவச திருமணம் செய்துக்கிட்டு வந்திருக்கிறார்..
விமலா : 😂😂
-------------------------------------
மாப்பிள்ளை : பாங்க்ல ஒர்க் பண்ற பொண்ணைத்தான் மேரேஜ் பண்ணிக்குவேன்.
தரகர் : ஓக்கே, குடும்ப 'பாங்க்"கான பொண்ணா பார்த்துடலாம்.
மாப்பிள்ளை : 😐😐
-------------------------------------
வாழ்க்கை போதனை...!!
-------------------------------------
🌟 மாற்ற முடியாததை, மாற்ற முனையாதே.
🌟 மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே!
🌟 அமைதியாக, மகிழ்ச்சியோடு இரு.
🌟 பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.
🌟 நண்பர்களிடம் அளவளாவு.
🌟 நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல்நலம் பேணி, இறை பக்தி கொண்டு, குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி, மன நிறைவோடு வாழ்.
🌟 இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள், சுலபமாக ஓடி விடும்!
🌟 வாழ்வை கண்டு களி!
🌟 ரசனையோடு வாழ்!
🌟 வாழ்க்கை வாழ்வதற்கே!
-------------------------------------
திருக்குறள் அதிசயங்கள்...!!
-------------------------------------
திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் வெளிவந்துள்ளது.
திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.
திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
-------------------------------------
இராஜ முகத்துக்கு எலுமிச்சை பழம்
-------------------------------------
நாம் அறிந்த விளக்கம் :
ராஜாவுக்கு எலுமிச்சை பழம் கொடுத்தது போல என்று சொல்லப்பட்ட பழமொழியாக நாம் கருதுகிறோம்.
விளக்கம் :
மகான்களைப் பார்க்கப் போகும்போது அவர்களுக்கு எலுமிச்ச பழம் தரும் வழக்கம் இருக்கிறது. அதாவது, எலுமிச்சை பழம் பெரியவர்களின் அறிமுகத்தைப் பெற்றுத்தரும். அதுபோலத் திறமையுள்ளவர்கள் தாம் நினைத்ததை எளிதாக, சிக்கனமாக முடிப்பார்கள் என்பது இந்தப் பழமொழியின் மூலம் அறியும் உண்மை விளக்கம் ஆகும்.
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக