
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் மிக மலிவான ஸ்மார்ட்போனாக இருக்கும் என குறிப்பிட்டார். பின்பு இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் செப்டம்பர் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று இந்திய சந்தையில் கிடைக்கும் எனவும் குறிப்பிட்டார் முகேஷ் அம்பானி. ஆனாலும் இந்த சாதனத்தின் முழு விவரங்கள் வெளியிடப்படவில்லை, குறிப்பிட்ட சில அம்சங்களை மட்டுமே தெரிவித்தார் முகேஷ் அம்பானி.
அதாவது வாய்ஸ் அசிஸ்டண்ட், மொழி பெயர்ப்பு, சிறப்பான கேமரா மற்றும் பல்வேறு இதர அம்சங்களை கொண்டிருக்கிறது இந்த அட்டகாசமான ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனம். மேலும் இந்த சாதனத்தில் ஹை-பில்டர் ஸ்மார்ட் கேமரா வசதியும் உள்ளது எனத் தெரிவித்தார் முகேஷ் அம்பானி.
ஆனால் தற்போது ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி சாதனத்தின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றி சற்று
விரிவாகப்
பார்ப்போம். அதாவது ஆண்ட்ராய்டு சிறப்பு பதிப்பான கோ எடிஷனில் தான்
ஜியோபோன் நெக்ஸ்ட் இயங்குகிறது எனக் கூறப்படுகிறது. குறிப்பிட்டு சொல்ல
வேண்டும் என்றால் ஏற்கனவே சந்தையில் விற்பனை செய்யப்படும் ஆண்ட்ராய்டு கோ
எடிஷன் சாதனம் போல் தான் இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி சாதனமும்
உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனத்தில் 1ஜி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதி இடம்பெறும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.
வெளிவந்த தகவலின்படி, ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனத்தின் பின்புறம் 12எம்பி கேமரா இடம்பெறும் என்று கூறப்படுகிறது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே செல்பீ கேமரா ஒன்றும் இதில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் பின்புற கேமரா ஆனது 1080 பிக்சல் வீடியோ பதிவு ஆதரவு, portrait mode உள்ளிட்ட அம்சங்களையும் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.
ஜியோபோன் நெக்ஸ்டின் அதிகாரப்பூர்வ படங்களின்படி, ஸ்மார்ட்போனில் எளிதில் திறக்கக்கூடிய பேக் கேஸ் இருக்கும், எனவே இந்த சாதனம் மாற்றக்கூடிய பேட்டரியைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. JioPhone மற்றும் JioPhone 2 ஐப் போலன்றி, JioPhone Next பல வண்ண விருப்பங்களிலும் கிடைக்கும்.
இது தவிர, ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனத்தின் இரண்டு ஸ்லாட்டுகளிலும் 4 ஜி ஆதரவுடன் இரட்டை சிம் கார்டு ஸ்லாட்டுகளை வழங்க வாய்ப்புள்ளது. குறிப்பாக ஜியோ சிம் கார்டு மற்றும் ஜியோ நெட்வொர்க்குடன் மட்டுமே செயல்படும் வகையில் இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் செப்டம்பர் 10-ம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் இந்த சாதனம் ரூ.5000 அல்லது ரூ.6000 விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக