சியோமி நிறுவனம் புதிதாகத் தனது மி டிவி வெப் கேமரா (Mi TV Webcam) சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனம் மக்கள் தங்கள் ஸ்மார்ட் டிவிகள் வழியாக 25fps இல் FHD தெளிவுத்திறனில் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள அனுமதி வழங்கும். இந்த வெப்கேம் 71 டிகிரி பீல்ட் ஆப் வியூவை அனுமதிக்கிறது மற்றும் அழைப்புகளின் போது சிறந்த ஆடியோ செயல்திறனுக்காக இரட்டை தொலைதூர மைக்ரோஃபோன்களை இது உள்ளடக்கியுள்ளது. இந்த சாதனத்தின் விலை மற்றும் முழு விபரங்களைப் பார்க்கலாம்.
Mi TV Webcam சாதனம் அறிமுகம்
இந்த Mi TV Webcam சாதனம் ஒரு யூ.எஸ்.பி இன்டர்பேஸ் உடன் வருகிறது, இது Mi டிவி மற்றும் ரெட்மி டிவி மாடல்களுக்கும், கூடுதலாகப் பல ஆண்ட்ராய்டு டிவி அடிப்படையிலான ஸ்மார்ட் டிவிகளுடன் இந்த சாதனத்தை இணைக்க இது அனுமதிக்கிறது. இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய Mi TV Webcam சாதனம் நம்ப முடியாத குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால், இதனை அனைத்து ஸ்மார்ட் டிவி பயனர்களும் வாங்கி பயன்பெற அதிக வாய்ப்புள்ளது.
Mi TV Webcam சிறப்பம்சங்கள்
கூகிள் டுவோ வழியாக வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள Mi TV வெப்கேம் உங்களை அனுமதிக்கும். இந்த சாதனம் 80x35x67 மிமீ அளவிடும் மற்றும் 45.6 கிராம் எடையைக் கொண்டுள்ளது. சியோமியிலிருந்து வரும் வெப்கேம் 25fps இல் 1080p தரத்தில் வீடியோ பதிவு ஆதரவுடன் 2 எம்.பி சென்சாருடன் வருகிறது. நான்கு மீட்டர் தூரத்திலிருந்து ஆடியோவைப் பிடிக்கக்கூடிய இரட்டை ஸ்டீரியோ மைக்ரோஃபோன்களையும் இந்த வெப் கேமரா ஆதரிக்கிறது.
3D இமேஜ் நாய்ஸ் ரிடக்க்ஷன்
சாதனம் ஒரு 3D இமேஜ் நாய்ஸ் ரிடக்க்ஷன் வழிமுறையைக் கொண்டுள்ளது. இது வீடியோ அழைப்பின் போது ஏற்படும் பிக்ச்சர் கிரைன்ஸை குறைக்க உதவுகிறது என்று சியோமி நிறுவனம் கூறியுள்ளது. மி டிவி வெப்கேம் லென்ஸின் மேல் வைக்கக்கூடிய பிஸிக்கல் ஷட்டர் மற்றும் இணைப்பிற்கான யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட் டிவியில் இணைப்பதற்காக Mi TV Webcam சாதனம் சரிசெய்யக்கூடிய காந்த தளத்தைக் கொண்டுள்ளது. இதைப் பயன்படுத்தி சாதனத்தை எளிதாக நிறுவ முடியும்.
எப்படி வீடியோ அழைப்புகளை மேற்கொள்வது?
வீடியோ அழைப்புகளைச் செய்ய நீங்கள் டிவி ஆப் ஸ்டோரிலிருந்து கூகிள் டியோ பயன்பாட்டை நிறுவ வேண்டும். பின்னர் கூகிள் டியோ ஆப்ஸ் வழியாக உங்கள் காண்டாக்ட்டில் இருக்கும் நபர்களுக்கு வீடியோ அழைப்பை மேற்கொள்ளலாம். மி டிவி வெப்கேம் சாதனம் ஆண்ட்ராய்டு டிவி 8 மற்றும் அதற்கு மேற்பட்டவற்றுடன் இணக்கமானது. மேலும் அனைத்து மி டிவி மற்றும் ரெட்மி டிவி மாடல்களில் இது ஆதரிக்கப்படுகிறது. இந்த சாதனம் விண்டோஸ் 7 மற்றும் அதற்கு மேற்பட்ட இயங்குதளத்தைக் கொண்ட டெஸ்க்டாப்புகளுடன் இணக்கமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Mi TV Webcam விலை மற்றும் விற்பனை தேதி
Mi TV Webcam சாதனம் இந்தியாவில் வெறும் ரூ .1,999 என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த Mi TV Webcam சாதனம் வரும் ஜூன் 28 ஆம் தேதி முதல் Mi.com மற்றும் Mi Home மற்றும் Mi Studio கடைகள் வழியாக விற்பனைக்கு வாங்குவதற்குக் கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக