ரியல்மி நிறுவனத்தின் அனைத்து சாதனங்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு உள்ளது. அண்மையில் இந்நிறுவனம் ரியல்மி ஸ்மார்ட் டிவி ஃபுல் எச்டி 32-இன்ச் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் மற்ற 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை விட தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.
32-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்
அதாவது பெரும்பாலான 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் எச்டி (1366x768-பிக்சல்கள்) ரெசல்யூஷன் ஸ்க்ரீன் ஆதரவுடன் வெளிவருகின்றன. ஆனால் ரியல்மி நிறுவனம் இப்போது கொண்டுவந்துள்ள ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி ஆனது 1920x1080 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட எல்இடி ஸ்க்ரீனுடன்வருகிறது. எனவே சிறந்த திரை அனுபவத்தை கொடுக்கும் என்றே கூறலாம். மேலும் ரியல்மி அறிமுகம் செய்துள்ள இந்த ஸ்மார்ட் டிவியின் முழுவிவரங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவல்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 32-இன்ச் ஃபுல் எச்டி (1,920x1,080 பிக்சல்கள்) ரெசல்யூஷன் கொண்ட ஸ்மார்ட் டிவி ஆனது சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் சிறந்த திரை அனுபவத்தை கொடுக்கும் வகையில் சிறிய வடிவில் கூர்மையான மற்றும் நல்ல தெளிவுத்திறனில் Full HD கன்டென்ட்டைக் காணும் திறனை உறுதிப்படுத்துகிறது.
அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவியில் கூகுள் பிளே ஸ்டோருக்கான அணுகல் உள்ளது. எனவே நீங்கள் விரும்பும் செயலிகளை இந்த டிவியில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். இதுதவிர கூகுள் அசிஸ்டென்ட் ஆதரவு, க்ரோம் காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை வழங்குகிறது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்.
குறிப்பாக இந்த 32-இன்ச் ரியல்மி ஸ்மார்ட் டிவியில் எச்.எல்.ஜி மற்றும் எச்.டி.ஆர் 10 உள்ளிட்ட எச்.டி.ஆர் பார்மெட்கள் ஆதரிக்கப்படுகின்றன. இதுதவிர 24W என மதிப்பிடப்பட்ட சவுண்ட் அவுட்புட், குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர் சிஸ்டம் மற்றும் டால்பி ஆடியோவுக்கான ஆதரவைக் கொண்டுள்ளதுஇந்த புதிய ஸ்மார்ட் டிவி.
இந்த ரியல்மி ஸ்மார்ட் டிவி ஆனது ஆண்ட்ராய்டு டிவி 9 Pie இயங்குதளம் மூலம் இயங்குகிறது. மேலும் க்ரோமா பூஸ்ட் பிக்சர் எஞ்சின், 400 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 85 சதவீதம் என்.டி.எஸ்.சி கலர் ரீப்ரொடெக்ஷன் உள்ளிட்ட அம்சங்களையும் கொண்டுள்ளது இந்த 32-இன்ச்ரியல்மி ஸ்மார்ட் டிவி.
இப்போது கொண்டுவரப்பட்டுள்ள இந்த ரியல்மி ஸ்மார்ட் டிவியில் மீடியாடெக் குவாட்-கோர் ஏ53 சிபியு ஆதரவுடன் மாலி-470 எம்பி3 ஜிபியு ஆதரவும் உள்ளது. மேலும் 1GB DDR3 ரேம், புளூடூத் 5.0 மற்றும் 2.4GHz வைஃபை, மூன்று எச்.டி.எம்.ஐ போர்ட், இரண்டு யூ.எஸ்.பி போர்ட், எஸ்.பி.டி.ஐ.எஃப், ஈதர்நெட் போர்ட் ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி.
ரியல்மி ஸ்மார்ட் டிவி ஃபுல் எச்டி 32-இன்ச் மாடலின் விலை ரூ.18,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சாதனத்தின் அறிமுகம சலுகையாக ரூ.17,999-விலையில் வாங்க முடியும் என்று கூறப்படுகிறது. அதன்படி வரும் ஜூன் 29-ம் தேதி ரியல்மி.காம் மற்றும் பிளிப்கார்ட் வழியே இந்த சாதனத்தை வாங்க முடியும்.
கேஜெட்டுகளும் - தொழில்நுட்பங்களும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக