Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 28 ஜூன், 2021

ஏர்டெல் சைலெண்டாக செய்த வேலை: இனி இந்த 3 திட்டம் கிடையாது.. அதுக்கு பதில் 'இந்த' திட்டமா?

ஏர்டெல் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை நிறுத்திவிட்டு புதிய ரூ .128 ஸ்மார்ட் ரீசார்ஜ் பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆயுள் காப்பீட்டு சலுகைகளை வழங்கிய ரூ .179 மற்றும் ரூ .279 ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்கள் அதிகாரப்பூர்வ தளத்திலிருந்து ஏர்டெல் நிறுவனம் தற்பொழுது அகற்றியுள்ளது. தற்போதுள்ள மற்றும் பழைய ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களில் என்ன-என்ன நன்மைகள் கிடைக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம்.

ஏர்டெல் ரூ .279 ப்ரீபெய்ட் திட்டத்தை நிறுத்துகிறது

ஏர்டெல் நிறுவனம் ரூ. 279 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் தினமும் 100 எஸ்எம்எஸ் உடன் வரம்பற்ற அழைப்பு சலுகைகளை வழங்கி வந்தது. இந்த திட்டத்தின் மூலம், பயனர்களுக்குத் தினசரி 1.5 ஜிபி டேட்டாவை நிறுவனம் வழங்கி வந்தது. இந்த திட்டத்திற்கான செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள் ஆகும்.

ரூ .4 லட்சம் மதிப்புள்ள எச்.டி.எஃப்.சி ஆயுள் காப்பீடு

இத்துடன், கூடுதல் நன்மையாக ஷா அகாடமியிலிருந்து நான்கு வார சந்தா, விங்க் மியூசிக் இலவச அணுகல், ரூ .4 லட்சம் மதிப்புள்ள எச்.டி.எஃப்.சி ஆயுள் காப்பீடு மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் சேவையில் பிரீமியம் உள்ளடக்கம் ஆகியவை கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ 179 ப்ரீபெய்ட் திட்டத்தை நிறுத்துகிறது

ஏர்டெல்லின் ரூ .179 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமும் அதிகாரப்பூர்வ தளத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது. இது ரூ .2 லட்சம் மதிப்புள்ள பாரதி ஆக்சா ஆயுள் காப்பீடு, 2 ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ் மற்றும் செல்லுபடியாகும் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்தத் திட்டத்தில் ஆன்-நெட் மற்றும் ஆஃப்-நெட் அழைப்புகளுக்கான வரம்பற்ற அழைப்பு நன்மையும் கிடைக்கிறது. இனி இந்த திட்டம் கிடைக்காது என்பது உறுதியாகியுள்ளது. ஆனால், இதே நன்மையுடன் மாதம் 208 ரூபாய் செலவில் உங்களுக்கு வேறு ஒரு திட்டம் கிடைக்கிறது.

ரூ .2,498 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மாதம் வெறும் 208 ரூபாய் தான் செலவு

இப்போது இந்த திட்டத்தைப் பயன்படுத்தும் நபர்கள் இதே விலையின் கீழ் நல்ல திட்டத்தைத் தேர்வு செய்ய விரும்பினால், நீங்கள் ஏர்டெல்லின் ரூ .2,498 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்யலாம். இது ஒரு ஆண்டு திட்டம் என்பதை முதலில் கவனித்துக்கொள்ளுங்கள். 12 மாதங்களுக்கு நீங்கள் இந்த திட்டத்தைத் தேர்வு செய்யும் போது நீங்கள் மாதத்திற்கு சுமார் 208 ரூபாய் என்று செலவு செய்கிறீர்கள். இந்த திட்டத்தின் கீழ் உங்களுக்கு என்ன-என்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.


நமைக்கான பட்டியலே பெருசா இருக்கே.!

இந்த நீண்ட கால ரீசார்ஜ் திட்டத்தில் 2 ஜிபி தினசரி தரவு, எந்த நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ சந்தா ஆகியவை கிடைக்கிறது. இந்த பேக் விங்க் மியூசிக் ப்ரீபெய்ட் சந்தாவையும் கொண்டுள்ளது. இலவச ஹெலோட்டூன்ஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் மற்றும் ஃபாஸ்டேக் மீது ரூ .150 கேஷ்பேக் ஆகியவை கிடைக்கிறது. குறிப்பிட்டுள்ளபடி, ஷா அகாடமியின் சந்தாவுடன் இந்த ரீசார்ஜ் பேக் 28 நாட்களுக்கு இலவச ஆன்லைன் கோர்ஸுக்கான அனுமதியை வழங்குகிறது.

ரூ .298 ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் உங்களுக்கு செட் ஆகுமா?

நீங்கள் மலிவான 2 ஜிபி தினசரி தரவுத் திட்டத்தைத் தேடுகிறீர்களானால் ரூ .298 ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை வாங்குவதையும் பரிசீலிக்கலாம். இது 28 நாட்கள் செல்லுபடியாகும். மீதமுள்ள சலுகைகள் ரூ .2,498 பேக்கைப் போன்றது தான் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். சரி, இப்போது ஏர்டெல் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள ரூ. 128 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ .128 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் தரும் நன்மைகள்

ஏர்டெல் தொலைத்தொடர்பு ஆபரேட்டர் ரூ .45 ஸ்மார்ட் ரீசார்ஜ் பேக்கையும் அகற்றியுள்ளது. அதற்குப் பதிலாக புதிய ரூ .128 பேக்கை அதன் போர்ட்ஃபோலியோவில் ஏர்டெல் நிறுவனம் தற்பொழுது சேர்த்துள்ளது. இது எந்த டாக் டைம் அல்லது தரவு நன்மைகளையும் வழங்காது. உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி அழைப்புக்கு வினாடிக்கு 2.5 பைசா மற்றும் எஸ்எம்எஸ் முறையே ரூ .1 மற்றும் ரூ .1.5 செலவாகும். ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது.

உண்மையில் இவர்கள் எல்லாம் அதிர்ஷ்டசாலிகள் தான்

நீங்கள் பட்ஜெட் ஸ்மார்ட் ரீசார்ஜ் போக்கை தேடுகிறீர்களானால், நீங்கள் ரூ .49 திட்டத்தை வாங்கலாம், இது 38.52 டாக் டைம் மற்றும் 100MB மொத்த தரவை வழங்குகிறது. ஏர்டெல்லின் அதிகாரப்பூர்வ தளத்தின்படி இது 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது. ஏர்டெல் நிறுவனம் ஏன் சத்தமில்லாமல் இப்படி மூன்று முக்கிய திட்டங்களைத் தனது பட்டியலில் இருந்து நீக்கியது என்பது குறித்து எந்தவிதமான தகவலும் இல்லை.ஆனால், இந்த திட்டங்களைத் தேர்வு செய்து காப்பீட்டு நன்மையைப் பெற்றவர்கள் எல்லாம் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள் தான்.
,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக