Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 30 ஜூன், 2021

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.


அமைவிடம்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் மகாமக குளத்தின் வடகரையிலுள்ள காசி விஸ்வநாதர் கோவிலே திருக்குடந்தைக் காரோணம் என்று அறியப்படும் பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று சிலர் சொல்கின்றனர்.

மாவட்டம் :

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.

எப்படி செல்வது?

சென்னையில் இருந்து அதிக பேருந்துகள் மற்றும் ரயில் வசதிகள் உள்ளன. மதுரை, திருச்சி, சேலம் மற்றும் கோவையிலிருந்து அதிக பேருந்து வசதிகள் உள்ளன.

கோயில் சிறப்பு :

மகாமகக் குளத்தின் வடகரையில் இக்கோயில் அமைந்துள்ளது. கங்கை முதலிய நவகன்னியர்களின் வேண்டுகோளுக்கிணங்க சிவபெருமான் காசியில் இருந்து அவர்களுடன் வந்து இங்கு தங்கினார். அதனால் காசிவிசுவநாதர் எனப் பெயர் பெற்றார். 

இத்தலத்தில் நவகன்னியர்களின் சிலை அவரவர் நிலத்தின் முகப்பாவனையுடன் அமைந்த திருமேனிகளுடன் எழுந்தருளியுள்ளனர்.

வேப்ப மரத்தின் கீழ் இங்கு சிவலிங்கம் உள்ளது சிறப்பாகும். 

சண்டிகேஸ்வரரின் எதிரே துர்க்கை இருப்பது மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம்.

ராமர் இலங்கைக்கு செல்லும் முன்பு இத்தலத்திற்கு வந்து லிங்க பிரிதிஷ்டை செய்து ராமர் வழிபட்ட ஷேத்திர மகாலிங்கத்தை இக்கோயிலுக்கு வடகிழக்கு மூலையில் நாம் காணலாம். இந்த மகா லிங்கம் இன்றும் வளர்ந்து வருவதாக கூறுகின்றனர். 

இத்தலத்திலேயே ராமர் ராவணனை கொள்ள ருத்ராம்சம் வேண்டி சிவபெருமானை வழிபட்டு ருத்ராம்சம் ஆரோகணிக்கப் பெற்றதால் காரோணம் என்ற பெயர் பெற்றது.

கோயில் திருவிழா :

மாசி மகத்தை ஒட்டி பத்து நாட்கள் திருவிழா நடத்தப்படும். ஒன்பதாம் திருநாளன்று தேரோட்டம் நடக்கிறது.

வேண்டுதல் :

பெண்கள் ருதுவாகவும், திருமணத் தடை நீங்கவும், பாவங்கள் நீங்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன் :

சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக