-------------------------------------
இது சிரிப்பதற்கு மட்டுமே...!
-------------------------------------
ஒரு நபர் தனது காரை ஒரு கடைக்கு முன்னால் நிறுத்திவிட்டு, தனது மகளிடம் சொன்னார்.
'கார்லயே பத்திரமா இரும்மா... உனக்கு சாக்லேட் வாங்கிட்டு சீக்கிரமா வந்துர்றேன்" என்று சொல்லிவிட்டு கடைக்கு கிளம்பினார்.
அவர் திரும்பி வந்தபோது,
மகள் காரில் இல்லை. திகைத்தவர், சிறிது தூரம் சுற்றிப் பார்த்தபோது, 200 அடி தூரத்தில் ஒரு கட்டிடத்தை தன் மகள் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.
நிம்மதி பெருமூச்சுடன் ஓடிச் சென்று அவள் முன்னால் நின்றார்.
'என்னம்மா இங்க பண்றே?" என தவிப்புடன் கேட்டார்.
'என்னைத் தடுக்காதீங்க... அப்பா. இந்த பில்டிங்க்கும், எனக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குனு நினைக்கிறேன். போன ஜென்மத்துல நடந்த ஏதோ ஒரு விஷயம் என்னை டிஸ்டர்ப் பண்ணுதுனு நினைக்கிறேன். இதப்பத்தி எனக்கு தெரியணும்... நிறைய தெரியணும்" என கத்த ஆரம்பித்தாள்.
அப்பாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவள் திகைப்புடன் முன்னேறிக் கொண்டிருந்தாள்.
'கொஞ்சம்.. நில்லுமா" என கெஞ்சினார்.
ஆனால், அவள், அப்பா சொல்வதைக் கேட்காமல்.. அந்த கட்டிடத்தை நோக்கி சென்றாள்.
'அதுக்கும், எனக்கும் என்ன சம்பந்தம்னு தெரியறவரைக்கும் நான் ஓயமாட்டேன்பா".
பொறுமையிழந்த அப்பா பளாரென்று மகளின் கன்னத்தில் அறை ஒன்றை விட்டார். கதிகலங்கி போய் நின்ற மகளிடம் சொன்னார்.
'இந்த லீவுல அம்மாவோடவும், பாட்டியோடவும் சீரியல் பாத்து உன் மூளை எப்படி... இப்படி மழுங்கிப் போச்சு... லீவுக்கு முன்னாடி நீ போன ஸ்கூல்... இது."😆😆
-------------------------------------
தேன்...!!
-------------------------------------
🍯 தேனுடன் இஞ்சி, விதை நீக்கிய பேரிச்சம்பழத்தை ஊறவைத்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.
🍯 தூக்கம் ஏற்படுவதற்கு தேன் அருமையான மருந்து ஆகும். தேனையும், மாதுளம் பழரசத்தையும் சமஅளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.
🍯 கண் நோய், தோல் நோய்களுக்கும் தேனை பயன்படுத்தலாம். வெங்காயச்சாறுடன் தேனை கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும்.
🍯 இளம் சூடான வெந்நீருடன் எலுமிச்சை பழச்சாறு கலந்து தேனை அருந்தினால் வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி போன்ற நோய்கள் குணமாகும்.
🍯 தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களை சீராக விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால் இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும்.
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக