Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 18 ஜூன், 2021

இட்லி பஞ்சு மாதிரி இருக்கே... அதன் ரகசியம் என்ன? - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!!

-------------------------------------
கொஞ்சம் சிரிங்க பாஸ்....!!
-------------------------------------
வாடிக்கையாளர் : உங்க கடை இட்லி பஞ்சு மாதிரி இருக்கே எப்படி?
சர்வர் : பருத்திக்கொட்டையை ஆட்டி இட்லி சுடுறோம். அதான்...
வாடிக்கையாளர் : 😖😖
-------------------------------------
வீட்டுக்காரர் : வீட்டு வாடகையை எப்போ தர்றதா உத்தேசம்?
பாபு : சம்பளம் கைக்கு வந்ததும்...
வீட்டுக்காரர் : சம்பளம் எப்போ கைக்கு வரும்?
பாபு : என்ன சார் இப்படி கேக்குறீங்க? வேலைக்கே இன்னும் போகலை.. எந்த மடையன் சம்பளம் தருவான்.?
வீட்டுக்காரர் : 😠😠
-------------------------------------
விடுகதைகள்...!!
-------------------------------------
1. வாயிலிருந்து நூல் போடுவான்; மந்திரவாதியும் இல்லை, கிளைக்குக் கிளை தாவுவான்; குரங்கும் இல்லை, வலைவிரித்துப் பதுங்கியிருப்பான்; வேடனும் இல்லை. அவன் யார்? 

2. பார்க்கத்தான் கறுப்பு, ஆனால் உள்ளமோ சிவப்பு. நமக்குத் தருவதோ சுறுசுறுப்பு. அது என்ன? 

3. வால் நீண்ட குருவிக்கு வாயுண்டு. வயிறில்லை. அது என்ன? 

4. காதை திருகினால் பாட்டு பாடுவான். அவன் யார்?

விடை :

1. சிலந்தி

2. தேயிலை

3. அகப்பை

4. ரேடியோ
-------------------------------------
இன்றைய கடி...!!
-------------------------------------
ஒரு அண்ணனும், தங்கையும் ஓடி வர்றாங்க.. அண்ணனுக்கு 'மேல் மூச்சு" வாங்கிச்சு, தங்கைக்கு?
.
.
.
.
ஃபீமேல் மூச்சு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!