------------------------------------------
சிரிக்கலாம் வாங்க....!!
------------------------------------------
பாபு : அந்த ஆளு பஞ்சாயத்து தலைவரா? ரொம்ப குள்ளமா இருக்காரே...
கோபு : ஆமாம்... அவரு கட்டை-பஞ்சாயத்து பண்றவரு...
பாபு : 😅😅
பத்மா : நா உங்களை எங்கேயோ பார்த்து இருக்கேனே...
பிச்சைக்காரர் : ஆமாம் மேடம், நாம ரெண்டு பேரும் ஃபேஸ்புக்ல ஃபிரெண்ட்ஸா இருக்கோம்.
பத்மா : 😬😬
------------------------------------------
சிந்தனை வரிகள்...!!
------------------------------------------
மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி ஆகின்றான்.
எவ்வளவு மிகப்பெரிய கப்பலையும் தரைதட்டி நிற்க வைக்க மிகச்சிறிய நங்கூரம் போதுமானது. எவ்வளவு பெரிய தோல்விகளையும் கடந்து வர மிகச்சிறிய நம்பிக்கை போதுமானது.
செய்யும் செயலை முழு மனதோடு செய்யுங்கள். வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் நிம்மதி நிச்சயம் கிடைக்கும்.
எதற்கும் எப்போதும் தயார் நிலையில் இருந்து கொள்ளுங்கள். வாழ்க்கை எப்பொழுது வேண்டுமானாலும் வாய்ப்புகளை தரலாம் விழிப்புடன் இருங்கள்.
மறைத்து பேசுபவன் நல்லவனாகவும், மனதில் பட்டதை பேசுபவன் கெட்டவனாகவும் சித்தரிக்க படுகின்றனர் இவ்வுலகில்.
யாரெல்லாம் தொடர்வார்கள், யாரெல்லாம் பிரிவார்கள் என்பதை காலங்கள் முடிவு செய்வதில்லை, அவர்களின் சொற்கள் தான் முடிவு செய்கிறது.
கனிவான ஒரு வார்த்தை கல்லையும் கரைத்து விடும். இனிமையான ஒரு வார்த்தை இரும்பையும் வளைத்து விடும்.. அன்பை விதையுங்கள்... அது ஆயிரம் மடங்காகி உங்களிடமே திரும்பி வரும்.
------------------------------------------
இன்றைய கடி..!!
------------------------------------------
1. ஒரு பூனை குழந்தைகள் பள்ளிக்கூடத்தை சுத்தி சுத்தி வருது ஏன்?
.
.
.
.
.
அது ஒரு 🐭எலிமெண்டரி ஸ்கூலாம்.😎
2. போஸ்ட்மேன் கால் தடுக்கி விழுந்தால் எப்படி விழுவார்?
.
.
.
.
.
📬தபால்னு..!😎
------------------------------------------
குறளும்... பொருளும்...!!
------------------------------------------
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
பொருள் :
அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக