Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 29 ஜூன், 2021

உங்க சிரிப்புக்கு நாங்க கேரண்டி.. உனக்குள் நான் ! எனக்குள் நீ !! - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!!

-------------------------------------
உங்க சிரிப்புக்கு நாங்க கேரண்டி பாஸ் !
-------------------------------------
கவி ஒரு நேர்முக தேர்வுக்காக அலுவலகம் செல்கிறான். எப்படியாவது இந்த வேலை கிடைத்து விட வேண்டும் என்பது அவன் எண்ணம். அலுவலக தேர்வு அறையில்... 

மேலாளர் : நான் கேக்குற கேள்விக்கெல்லாம் எதிர்மறையான பதிலை சொல்லணும்..

கவி : சரி சார்.. முயற்சி பண்றேன்..

மேலாளர்: இரவு?

கவி : பகல்...

மேலாளர் : புதுமை? 

கவி : பழமை..

மேலாளர் : வறுமை? 

கவி : செழுமை..

மேலாளர் : வெரி குட்... கரெக்டா சொல்றியே ! 

கவி : வெரி பேட்...தப்பா சொல்றியே...

மேலாளர் : ஆங்... ம்ம்ம்... ஆக்கல்? 

கவி : அழித்தல்...

மேலாளர் : அழகு?

கவி : ஆபத்து..

மேலாளர் : தப்பு..

கவி : சரி.... 

மேலாளர் : இல்ல தம்பி.. நீங்க சொல்றது தப்பு.. 

கவி : ஆமா அண்ணே ! நான் சொல்றது சரி..

மேலாளர் : ப்ச்.... நீங்க கிளம்பலாம்..

கவி : நீங்க இருக்கலாம்...

மேலாளர் : போதும்.. வெளியே போப்பா !!! 

கவி : வேணும்..உள்ளே வாப்பா !!! 

மேலாளர் : நிறுத்துடா..

கவி : ஆரம்பிடா..

மேலாளர் : ஐயோ கடவுளே !!! என்ன காப்பாத்து !!

கவி : ஆஹா பிசாசே!! இவனை கொல்லு...

மேலாளர் : யு ஆர் ரிஜெக்டட்...

கவி : ஐ ஆம் செலக்டெட் !

மேலாளர் : ?!?!?!.. போதும் நீ செலக்டட் தான்.. ஆர்டர் வீடு தேடி வரும்.. இப்போ நீ போப்பா..

கவி : ரொம்ப தேங்க்ஸ் சார்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக