Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 29 ஜூன், 2021

Covishield: ஐயோப்பிய யூனியனுக்கு க்ரீன் பாஸ் மறுப்பு; மவுனம் கலைத்த SII


Covishield: ஐயோப்பிய யூனியனுக்கு க்ரீன் பாஸ் மறுப்பு; மவுனம் கலைத்த SII

ஐரோப்பிய நாடுகளில் உள்ள கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள்,  ஐரோப்பிய யூனியனின் பிற நாடுகளுக்கு பயணம் செய்வதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு மக்கள் எளிதாக பயணம் மேற்கொள்ள கிரீன் பாஸ் என்ற நடைமுறையை கடைபிடிக்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் கிரீன் பாஸ் சான்றிதழ் உடன் ஐரோப்பிய யூனியம் நாடுகளில் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு சுலபமாக சென்று வரலாம்.

 

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஐரோப்பிய மருந்துகள் அமைப்பு (European Medicines Agency - EMA)இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தால் (SII) தயாரிக்கப்படும் கோவிஷீல்டு (COVISHIELD) தடுப்பூசிக்கு கிரீன் பாஸ் அங்கீகாரம் வழங்கவில்லை.

இதனால் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் கோவிஷீல்ட் தடுப்பூசியை போட்டுக் கொண்டால் அவர்கள் ஐரோப்ப்பிய நாடுகளுக்குள் பயணம் செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. இந்நிலையில், இந்த விவகாரத்தை உயர் மட்ட அளவில் எடுத்துச் செல்வேன் என சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் (SII) தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவாலா உறுதி அளித்துள்ளார்.

இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் வேக்ஸேவ்ரியா ( Vaxzevria), அமெரிக்காவின் BioNTech-Pfizer, மாடர்னா (Moderna,), ஜான்சன் அண்டு ஜான்சன் ஆகிய நான்கு தடுப்பூசிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கியுள்ளது. வேக்ஸேவ்ரியா  தடுப்பூசி, என்பது ஆக்ஸ்போர் அஸ்ட்ரா ஜெனகா உணைந்து தயாரித்த தடுப்பூசி என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவில், கோவேக்ஸின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகளுடன் கூடவே, ஸ்புட்னிக் வி தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. இதில் பெருமளவு கோவிஷீல்ட் தடுப்பூசியே போடப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக