சமீபத்திய பறக்கும் டாக்ஸி மாடல் எலக்ட்ரிக் வோலோசிட்டி ஹெலிகாப்டர் 30 மீட்டர் உயரத்தில் 30 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து முதற்கட்ட சோதனையில் வெற்றிப்பெற்றுள்ளது. தற்போதைய புதிய மின்சார பறக்கும் டாக்ஸியின் முதல் சோதனையானது 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன் முழு சேவையையும் வெற்றிகரமாக கொண்டுவரும் திட்டமாக இருக்கிறது.
மின்சார் ஏர் டாக்ஸி
ஜெர்மனிய நிறுவனமான வோலோகாப்டர் ஜூன் 21 அன்று லு போர்கெட் விமான நிலையத்தில் இருந்து தனது மின்சார் ஏர் டாக்ஸியை வெற்றிகரமாக பறக்க செய்தது. சோதனையில் விமானம் மூன்று நிமிடங்கள் நீடித்தது. இருப்பினும் அதில் பயணிகள் யாரும் இல்லை. 500 மீட்டர் பாதையில் 30 கிலோமீட்டர் வேகத்திலும் 30 மீட்டர் உயரத்திலும் பயணித்ததாக உற்பத்தியாளர்கள் இந்த சோதனை குறித்து தெரிவித்தனர்.
லோகாப்டர் தலைமை நிர்வாக அதிகாரி
பறக்கும் டாக்ஸி குறித்து பார்க்கையில், இது இரண்டு பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடியது, மேலும் இதில் பொருட்கள் வைத்துக் கொள்வதற்கு கூடுதல் இடம் வழங்கப்பட்டுள்ளது. வோலோகாப்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஃப்ளோரியன் ரியூட்டர், பறக்கும் டாக்ஸியில் முதல் ஓட்டுநர் உரிமத்தை பெற்றுள்ளார். இருப்பினும் எதிர்காலத்தில் விமான ஓட்டிகள் இதை இயக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சான்றளிக்கப்பட்ட மற்றும் உரிமம் பெற்ற ஹெலிகாப்டர் பைலட்
இதுகுறித்து ஃப்ளோரியன் ரியூட்டர் ராய்ட்டர்ஸிடம் கூறுகையில், ஒழுங்குமுறையை பொருத்தவரை ஆரம்பத்தில் எங்களிடம் ஒரு முழுமையான சான்றளிக்கப்பட்ட மற்றும் உரிமம் பெற்ற ஹெலிகாப்டர் பைலட் இருப்பார் என குறிப்பிட்டார். மேலும் காலப்போக்கில் இந்த வாகனங்கள் முழுமையாக தானியங்கி முறையில் பறக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புவதாகவும் அதற்கு பைலட் உரிமத்தின் தேவையில்லை எனவும் குறிப்பிட்டார்.
வோலோசிட்டி இயந்திரம்
வோலோகாப்டர் தனது வோலோசிட்டி இயந்திரத்தை முதன்முதலில் அக்டோபர் மாதம் 2020 ஆம் ஆண்டில் வெளியிட்டது. அந்த சமயத்தில் இயந்திரம் 100 கிலோமீட்டர் உயரத்தில் பறக்க முடியும் எனவும் 35 கிலோமீட்டர் பயணத்தை கொண்டிருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டது.
பறக்கும் டாக்ஸி சவாரி
அதோபோல் இந்த பறக்கும் டாக்ஸி சவாரிக்கு எவ்வளவு செலவாகும், டாக்ஸிகள் புறப்பட்டு தரையறங்கும் போது எவ்வளவு சத்தமாக இருக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. 2024 ஆம் ஆண்டு பாரிஸீல் பறக்கும் டாக்சிகள் அறிமுகப்படுத்தும் ஒரே நிறுவனமாக வோலோகாப்டர் இருக்காது.
ஏர்பஸ் நிறுவனத்தின் சிட்டி ஏர்பஸ்
காரணம் 2020 ஆம் ஆண்டில் பிரெஞ்சு விமான நிறுவனமான
ஏர்பஸ் தனது சிட்டி ஏர்பஸ் தகவல்களை வெளியிட்டது. இது ரோஸி டிஸ்னி லேண்ட் பாரிஸ்
மற்றும் ரோஸி செயிண்ட் டெனிஸ் இடையே 120 கிலோமீட்டர் வேகத்தில் 15 நிமிடங்களுக்கு
வான்வழி இணைப்புகளை வழங்கும் என கூறியது. இந்த நிறுவனம் 2030முதல் சுற்றுலா
மையங்களுக்கு சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக