Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 23 ஜூன், 2021

அதிரடி விற்பனைக்கும் ஒரு நியாயம் வேண்டும்- இ-காமர்ஸ் நிறுவனங்கள் புதிய கட்டுப்பாடு!

அதிரடி விற்பனைக்கும் ஒரு நியாயம் வேண்டும்- புதிய கட்டுப்பாடு!

நுகர்வோர் உணவு மற்றும் பொதுவிநியோக அமைச்சகம் தகவல்படி, இ-காமர்ஸ் ரீடெஸ் நிறுவனங்கள் தொழில்வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தக துறையில் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அளவுக்கு அதிகமாக வழங்கப்படும் ஆஃபர்கள் மேலும் அதிரடி சேல்ஸ் ஆகியவைகளுக்கு தடை விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு தளங்களில் மேற்கொள்ளப்படும் வர்த்தகம் குறித்து அரசு தரப்பில் இருக்கும் சந்தேகத்தை 72 மணி நேரத்துக்குள் நிவர்த்தி செய்வது கட்டாயமாகும். அதேபோல் சமூகவலைதளங்களுக்கு விதித்த விதிகள் போல் வாடிக்கையாளர்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு குறைகளை தீர்க்கும்வகையில் அதிகாரிகளை இ-காமர்ஸ் நிறுவனங்கள் நியமிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசு இடைநிலை வழிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறை விதிகள் 2021 கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி இந்திய அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது. இதை நிறைவேற்றுவதற்கான கால அவகாசம் மே 25 ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டது. மத்திய அரசு குறிப்பிட்ட பெரும்பாலான விஷயங்களை சமூகவலைதளங்கள் பின்பற்றவில்லை. இதையடுத்து இந்தியாவில் இந்த தளங்கள் இயங்க அனுமதி வழங்கப்படுமா என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது.

சமூகவலைதளம் பயனர்கள் குறைகளை கேட்டறியும் அதிகாரி, தலைமை இணக்க அதிகாரி, நோடர் தொடர்பு நபர் ஆகியவர்களை நியமிக்க வேண்டும். சமூகவலைதளங்களில் பல குற்றச் செயல்கள் நடக்கிறது, எனவே பயனர்கள் குற்றங்களை கேட்கும் நேரடி அதிகாரிகள் நியமிக்க வேண்டும் போன்ர விதிமுறைகள் விதிக்கப்பட்டது. கூ என்ற இந்திய சமூகவலைதளம் தவிர வேறு எந்த முன்னணி சமூகவலைதளம் நிறுவனத்தின் குறைகளை கேட்கும் அதிகாரி போன்ற எதையும் நியமிக்கவில்லை.

இந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் இடையீட்டாளர்கள் என்ற நிலை சமூகவலைதளம் இழக்க நேரிடும். மேலும் அனைத்து குற்றச் செயல்களுக்கும் அந்தந்த நிறுவனங்களே பொறுப்பேற்கும் நிலை உருவாகும். இது எதையும் சமூகவலைதளங்கள் பின்பற்றவில்லை, இது அரசு தரப்பை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

தனிநபர் கணக்குகள் தனிச்சையாக முடக்குதல், மத ரீதியான அவதூறுகளுக்கு எதிரான நடவடிக்கை, பாலியல் புகார்கள் போன்று தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. மாதத்திற்கு எத்தனை புகார்கள் வந்தன அவற்றில் எத்தனை தீர்க்கப்பட்டன போன்ற அறிக்கையும் சமூகவலைதளம் தரவில்லை. சில சமூகவலைதளங்கள் கால அவகாசம் கோரியுள்ளன. கருத்துப்படி உடனடியாக தடைவிதிக்கப்படுமா என்றால் அது கேள்விக்குறியே, சமூகவலைதளங்கள் இதை நிறைவேற்ற கால அவகாசம் கோரலாம், இதற்கான கால அவகாசம் அரசு தரப்பில் நீட்டிக்கப்படலாம் என்பதே நிதர்சணமான உண்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக