Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 30 ஜூன், 2021

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னா இது? அடையாளமே தெரியலையே.! இணையத்தில் வைரலாகும் வீடியோ..

கிம் ஜாங் உன்னின் புதிய தோற்றம்

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னா இது? என்று வியப்படையும் வகையில் அவரின் தோற்றம் முற்றிலுமாக மாறியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் சமீபத்தில் நடத்த ஒரு முக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவு தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

கிம் ஜாங் உன்னின் புதிய தோற்றம்

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் கடைசியாகப் பிப்ரவரி மாதம் பொது நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டார். பின்னர், திடீரென எந்த அறிவிப்பும் இல்லாமல் அவர் என்ன ஆனார்? எங்கு சென்றார் என்பதே தெரியாமல் மர்மமாக இருந்து வந்தது. வடகொரியாவின் சில முக்கியமான நிகழ்வுகளிலும் இவர் கலந்துகொள்ளாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இவர் உயிருடன் தான் இருக்கிறாரா? என்று கிசுகிசுத்த மக்கள்

இன்னும் சிலர் இவர் உயிருடன் தான் இருக்கிறாரா என்பது போன்றெல்லாம் கிசுகிசுக்க துவங்கினர். ஆனால், அந்த வாய்களுக்கெல்லாம் பூட்டு போடும் படி, சமீபத்தில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஒரு நிகழ்ச்சியில் தோன்றினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அவரின் எடை முன்பை விட இரண்டு மடங்கு குறைந்திருப்பதை அனைவராலும் உணர முடிந்தது.

வைரல் வீடியோ பதிவு

முக்கிய நிகழ்வில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னை பார்த்த பொதுமக்கள், அரசு அதிகாரிகள் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். மிகவும் ஒல்லியாக காணப்பட்ட வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் வீடியோ பதிவு வைரல் ஆகியுள்ளது. பழைய படங்களுடன் அவரின் தற்போதைய படத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவர் இளமையாகத் தோன்றுவது போல் தெரிகிறது. இருப்பினும், மக்களை இது கவலையடையச் செய்துள்ளதாக வடகொரியாவின் ஊடக தகவல்கள் தெரிவிக்கிறது.

இது நோயின் அறிகுறி இல்லை

இவர் உடல் எடை குறைவிற்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. சியோலின் கொரியா இன்ஸ்டிடியூட் ஃபார் நேஷனல் யூனிஃபிகேஷனின் மூத்த ஆய்வாளர் ஹாங் மின் கிம்மின் வெளிப்படையான எடை இழப்பு, நோயின் அறிகுறி இல்லை அவரது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரின் தந்தை மற்றும் தாத்தா ஆகிய இருவரும் இதய நோயினால் உயிர் இழந்தவர்கள் என்பதை அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டுக் கூறியுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக