
சியோமி நிறுவனம் இன்று முதல் முறையாகத் தனது டபுள் கேமரா செட்டப் கொண்ட ஸ்மார்ட் டிவி மாடலை சீன ஸ்மார்ட் டிவி சந்தையில் அறிமுகம் செய்கிறது. இந்த புதிய ஸ்மார்ட் டிவிக்கு நிறுவனம் சியோமி மி டிவி 6 (Xiaomi Mi TV 6) என்று பெயரிட்டுள்ளது. சியோமி நிறுவனம் ஜூன் 28 ஆம் தேதி (இன்று) நடைபெறும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. உலகத்தில் முதல் முறையாக டூயல் கேமரா கொண்ட ஸ்மார்ட் டிவி மாடலாக இந்த புதிய Xiaomi Mi TV 6 ஸ்மார்ட் டிவி இருக்கிறது என்று நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Xiaomi Mi TV 6 ஸ்மார்ட் டிவியில் டூயல் கேமராவா?
Xiaomi Mi TV 6 ஸ்மார்ட் டிவி டூயல் கேமராக்களுடன் வரும் என்பது தற்பொழுது அதிகாரப்பூர்வமாகத் தெரியவந்துள்ளது. இந்த அமைப்புடன் வெளியாகும் முதல் ஸ்மார்ட் டிவி இதுவாகும். சமீபத்திய டீஸரைப் பொறுத்தவரை, சியோமி மி டிவி 6 இல் 48 மெகாபிக்சல் கொண்ட டூயல் கேமராக்கள் இடம்பெறும். இவை டிவியின் மேல் தனி அமைப்பில் வைக்கப்பட்டுள்ளது. வீடியோ கேம்களை விளையாடுவதற்கு, நேவிகேஷன் கட்டுப்பாடுகளை இயக்குவதற்கும் இந்த இரண்டு கேமராக்களும் பயன்படுத்தப்படும்.
48 மெகாபிக்சல் இரட்டை கேமராவுடன் உலகின் முதல் ஸ்மார்ட் டிவி
இரண்டாம் நிலை கேமரா ஒரு புதிய மோடு பயன்பாட்டுடன் வெளிவர வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த புதிய மோடு எதனுடன் பொருந்தக்கூடியதாக இருக்கும் என்பது குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. கடந்த காலங்களில் ஸ்மார்ட் டிவிகளில் பிராண்டுகள் ஒரு கேமராவை ஒருங்கிணைத்துள்ள நிலையில், 48 மெகாபிக்சல் இரட்டை கேமராக்கள் இருப்பது டிவிக்களுக்கு மிகவும் அருமையான ஒன்றைத் தொடங்க வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் முறையக 100W ஸ்பீக்கர்.. இனி கூடுதல் ஸ்பீக்கர்களுக்கு அவசியமில்லை
இத்துடன், நிறுவனத்தின் மற்றொரு பதிவு இந்த புதிய சியோமி ஸ்மார்ட் டிவி 100W ஸ்பீக்கர்களுடன் வரும் என்று டீஸர் மூலம் வெளிப்படுத்தியுள்ளது. இது நிறுவனம் மேற்கொள்ளும் மற்றொரு முதல் மாற்றமாக இருக்கும், இது கூடுதல் ஸ்பீக்கர்களின் தேவையை நிராகரிக்கக்கூடும். ஆனால், மெலிதான வடிவமைப்பை உறுதி செய்யும் போது சியோமி ஸ்பீக்கர்களை எவ்வாறு டிவியுடன் இணைத்துள்ளது என்பது என்பது இன்னும் மர்மமாக இருக்கிறது.
QLED குவாண்டம் டாட் தொழில்நுட்பம்
Xiaomi Mi TV 6 ஸ்மார்ட் டிவி கூடுதலாக வைஃபை 6, 4.2.2 சரவுண்ட் சவுண்டு, இரண்டு HDMI 2.1 போர்ட்கள், AMD FreeSync பிரீமியம் கேமிங் டிஸ்பிளே, இது மென்மையான கேமிங் காட்சி அனுபவத்தை வழங்குகிறது. QLED குவாண்டம் டாட் தொழில்நுட்பம் மற்றும் இன்னும் பல அம்சங்கள் இந்த புதிய டிவி உடன் வெளிவரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி மி டிவி 6 ஒரு சில மேம்பாடுகளுடன் எக்ஸ்ட்ரீம் பதிப்பையும் பெறலாம் என்று லீக் தகவல் தெரிவிக்கிறது.
டூயல் கேமரா ஸ்மார்ட் டிவி உடன் சியோமி Mi TV ES 2021 சீரிஸ் அறிமுகமாக வாய்ப்பு
இத்துடன் கூடுதலாக, சியோமி நிறுவனம் புதிய சியோமி Mi TV ES 2021 ஸ்மார்ட் டிவி வரிசையையும் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் சியோமி மி டிவிக்கள் எப்படி மாறும் என்பதைப் பார்க்க இன்னும் சில மணி நேரங்களே உள்ளது. சியோமி நிறுவனத்தின் அறிமுகத்திற்குப் பிறகு, இந்த ஸ்மார்ட் டிவிகள் பற்றிய அப்டேட்கள் மற்றும் விலை விபரங்களைத் தெரிந்துகொள்ள எங்களின் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக