
அண்மையில் டுவிட்டர் நிறுவனம் இந்தியாவில் இடைக்கால குறை தீர்க்கும் அதிகாரியாக தர்மேந்திர சதுர் என்பவரை நியமித்தது. இந்த நிலையில் இவர் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) பதவியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிதாக கொண்டுவரப்பட்ட தொழில்நுட்ப சட்டங்களை பின்புற்றுவதில் டுவிட்டருக்கும் மத்திய அரசுக்கும் பனிப்போர் நிகழ்ந்து வருகிறது.
இடைக்கால குறைத்தீர்ப்பு அதிகாரி
இதற்கிடையில் டுவிட்டர் நிறுவனத்தின் இடைக்கால குறைத்தீர்ப்பு அதிகாரியாக தர்மேந்தரா சத்தூர் நியமிக்கப்பட்டார். இவர் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டுவிட்டர் இணையதளத்தில் இவரது பெயர் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது.
புதிய தகவல் தொழில்நுட்ப விதி
புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளில் ஒன்று உள்ளூரில் குறைதீர்க்கும் அதிகாரி நியமிக்க வேண்டும் என்பதாகும். இந்த விதிகளை நியமிப்பத்தில் மத்திய அரசுக்கும் டுவிட்டர் நிறுவனத்துக்கும் பனிப்போர் நிகழ்ந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக இந்தியாவில் குறைதீர்ப்பு அதிகாரியாக தர்மேந்திரா சத்தூர் நியமிக்கப்பட்டு இருந்தது டுவிட்டர் நிறுவனம் புதிய விதிகளை பின்பற்றத் தொடங்கும் நடவடிக்கையாக இருந்தது.
பதவி விலகியருப்பதாக தகவல்
இந்த நிலையில் புதிய குறை தீர்க்கும் அதிகாரி தர்மேந்திரா சத்தூர் பதவியேற்ற ஓரிரு நாளில் பதவி விலகியருப்பதாக வெளியான தகவல் டுவிட்டர் தொடர்ந்து அடுத்தடுத்த சிக்கலை சந்தித்து வருகிறது. சுமார் 50 லட்சம் பயனர்கள் கொண்ட இந்தியாவில் பயன்பாட்டு புகார்களை பெறுவதற்கு அதிகாரி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டத்தை மதித்து நடக்க வேண்டும்
இந்தியாவின் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என நாடாளுமன்ற நிலைக் குழு டுவிட்டர் நிறுவனத்துக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதுதொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் டுவிட்டர் இந்தியாவின் சட்ட ஆலோசகர் ஷாகுப்தா மற்றும் ஆயுஷி கபூர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் டுவிட்டர் நிறுவனம் தனக்கென வரையறுக்கப்பட்ட கொள்கைகளை பின்பற்றுவதாகவும் தனிநபர் கருத்து சுதந்திரம் உரிமைகளை மதித்து செயல்படுவதாகவும் விளக்கம் அளித்தனர்.
ஏன் அபராதம் விதிக்கக்கூடாது
புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு இணங்க மறுக்கும் வகையில் டுவிட்டர் செயல்பட்டு வருவதாக குழு உறுப்பினர்கள் விமர்சனம் முன்வைத்தனர். தகவல் தொழில்நுட்பத்திற்கான நாட்டின் விதிகளை மீறுவதற்கு டுவிட்டர் நிறுவனத்துக்கு ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
சமீபத்தில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்., டுவிட்டருக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் உடனடியாக புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு இணங்கும்படி கேட்டுக் கொண்டதோடு, விதிமுறைகளை கடைபிடிக்க தவறும்பட்சத்தில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழங்கப்படும் விலக்கை இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடப்பட்டது.
விதிகளுக்கு முழுமையாக இணங்க முடியும்
டுவிட்டர் பிரதிநிதிகள் புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளை முழுமையாக அமல்படுத்துவதற்கான காலக்கெடு குறித்து உறுதியற்றவர்களாக இருந்தனர். விதிகளை எப்போது முழுமையாக நிறைவேற்றப்படும் என்பது குறித்து டுவிட்டர் பிரதிநிதிகள் நிலையான நிலைப்பாடு அற்றவர்களாக இருந்தனர். இதையடுத்து எப்போது விதிகளுக்கு முழுமையாக இணங்க முடியும் எனவும் சில கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வ பதிலை வழங்கும்படியும் உறுப்பினர்கள் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
மத்திய அரசின் புதிய டிஜிட்டல் கொள்கை
தாங்கள் சட்டங்களை மதிப்பதாகவும், மத்திய அரசின் புதிய டிஜிட்டல் கொள்கையின்படி குறைதீர்ப்பு அதிகாரிகளை நியமித்து உள்ளதாகவும் டுவிட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வெளிப்படைத்தன்மை, கருத்துச் சுதந்திரம் மற்றும் தனியுரிமைக் கொள்கைகளுக்கு ஏற்ப ஆன்லைனில் மக்கள் உரிமைகளை பாதுகாக்க முக்கிய பணிகளை குழுவுடன் இணைந்து பணியாற்ற டுவிட்டர் தயாராக உள்ளது எனவும் தொடர்ந்து சேவை ஆற்றுவதற்கு இந்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவோம் என டுவிட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டுவிட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட குறைதீர்க்கும் அதிகாரியே தற்போது பதவி விலகியுள்ளார். இதனால் டுவிட்டர் நிறுவனம் மேலும் நெருக்கடியை சந்திக்கத் தொடங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக