
4ஜி ஸ்மார்ட்போன்களுக்கான காலம் முடிவை நோக்கி நெருங்கி வருவது போல் தெரிகிறது. காரணம், அனைத்து ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் 5ஜி ஸ்மார்ட்போன் தயாரிப்பதில் மும்முரமாக ஆர்வம் காட்டி வருகின்றன. சாம்சங், சியோமி போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே அதன் 5ஜி சாதனங்களை அறிமுகம் செய்த பிறகு, இப்போது இந்த பட்டியலில் ரியல்மி நிறுவனமும் சமீபத்தில் இடம்பெறவுள்ளது.
நம்ப முடியாத மலிவு விலையில் அடுத்த 5ஜி போன்
ஆனால், ரியல்மி நிறுவனம் ஒரு படி மேலே சென்று நம்ப முடியாத மலிவு விலையில் தனது 5ஜி போனை அறிமுகம் செய்யவிருக்கிறது. சமீபத்தில் ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போனை ரியல்மி நிறுவனம் ரூ. 15,999 என்ற விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. சமீபத்தில் நடந்த ஒரு கலந்தாய்வில், மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன் பற்றிய கேள்வி ரியல்மி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத்திடம் கேட்கப்பட்டது.
ரூ. 7000 த்திற்கு குறைவான விலையில் ஒரு தரமான 5ஜி ஸ்மார்ட்போன்
மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன் பற்றிக் கேட்கப்பட்ட கேள்விக்கு, இந்த ஆண்டு இறுதிக்குள் ரியல்மி நிறுவனம் ரூ. 7000 த்திற்கு குறைவான விலையில் ஒரு தரமான 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். இந்த புதிய மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போனிற்கான ஆரம்பக்கால பணிகள் துவங்கப்பட்டுள்ளது என்று ரியல்மி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் கூறியுள்ளார்
புதிய மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன்
ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கும் புதிய மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன் பற்றிய மற்ற விபரங்களை ரியல்மி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் வெளிப்படுத்தவில்லை. இருப்பினும் இதன் பெயர், அம்சங்கள், வெளியீட்டு விவரம் என அனைத்து தகவல்களும் வெகு விரைவில் வெளியிடப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மக்களின் கவனம் நிச்சயமாக ரியல்மி மீது தான்
ரியல்மி நிறுவனத்தின் கீழ் தற்பொழுது விற்பனைக்குக் கிடைக்கும் மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போனாக ரியல்மி 8 5ஜி இருக்கிறது. இந்த ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் வெறும் ரூ.13,999 என்ற விலை முதல் விற்பனைக்குக் கிடைக்கிறது. எது எப்படியாக இருந்தாலும், வெறும் ரூ.7000 விலையில் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் சாதனம் கிடைக்கும் என்றால் மக்களின் கவனம் நிச்சயமாக ரியல்மி மீது தான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக