
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தியது என்றுதான் கூறவேண்டும். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், கொரோனா பாதிப்பு பல நாட்கள் சுமார் 4 லட்சத்தை தாண்டியது. ஆனால் தற்போது ஊரடங்கு,பொதுமுடக்கம், கட்டுப்பாடுகளால் 2-வது அலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
மேலும் மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை தொடர்ந்து வீழ்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனாலும் இந்த கொரோனா பாதிப்பின் காரணமாக சிலர் வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனர், பின்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுகிறது.
இந்நிலையில் பள்ளி பாடங்களை ஆன்லைனில் படிக்க வசதியாக போன் வாங்குவதற்கு, 12 மாம்பழங்களை, 1.2 லட்ச ரூபாய்க்கு வாங்கி, மாணவிக்கு ஒரு தொழிலதிபர் உதவி செய்துள்ளார். மேலும் இது சார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.
வெளிவந்த தகவலின்படி, ஜார்க்கண்டில் இருக்கும் ஜம்ஷெட்பூரை சேர்ந்தவர் துள்சி (வயது 11). மேலும் ஆறாம் வகுப்பு படிக்கும் இந்த சிறுமியின் தந்தை ஸ்ரீமல் குமார் சாலையோரத்தில் பழங்களை விற்று வருகிறார்.
குறிப்பாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை, எனவே இப்போது அனைத்து பகுதியிலும் ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் துள்சி குமாரியிடம் ஸ்மார்ட்போன் இல்லை, எனவே இந்த சிறுமியினால் ஆன்லைனில் படிக்க முடியவில்லை.
அதேபோல் தனது பெண்ணுக்கு ஸ்மார்ட்போன் வாங்கி கொடுக்க ஸ்ரீமல் குமாரிடம் வசதியில்லை, இது பற்றி தகவல் அறிந்த மும்பையை சேர்ந்த தொழிலதிபர் அமியா ஹீட்டே அச்சிறுமிக்கு உதவ வேண்டும் என்று நினைத்தார்.
அந்த சிறுமியின் தந்தையின் வங்கிக்கணக்கு விவரங்களை பெற்று அதில் ரூ.1.20 லட்சத்தை டெபாசிட் செய்துவிட்டு ஒரு டஜன் மாம்பழம் அனுப்பும்படி சிறுமியம் கேட்டுக்கொண்டார். எனவே துள்சி இப்போது இன்ப அதிச்சியில் மூழுகியுள்ளார்.
மேலும் இதுகுறித்து துள்சி கூறியது என்னவென்றால்,நான் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள ஸ்மார்ட்போன் வாங்க மாம்பழம் விற்றுபணம் சேமித்தது உண்மைதான். இப்போது போன் வாங்கிவிட்டேன் இனி ஆன்லைன் வகுப்புகளில் என்னால் கலந்து கொள்ள முடியும் என்று கூறினார்.
அதேபோல் சிறுமிக்கு உதவிய அமியா ஹீட்டே கூறுகையில், அந்த சிறுமி பணம் இல்லமால் படிக்க கஷ்டப்படுவதாக கேள்விப்பட்டு மிகவும் வருத்தமாக இருந்தது. எனவே அவளுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் 12 மாம்பழங்கள் வாங்கி உதவி செய்தேன் என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக