Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 28 ஜூன், 2021

லேப்டாப் இருக்கா?-அப்ப இந்த பொருள் ரொம்ப அவசியம்: இதோ விவரம்!

லேப்டாப் என்பது பல்வேறு பயன்பாட்டுக்கும் பிரதான தேவையாக இருக்கிறது. குறிப்பாக கொரோனா ஊரடங்கு தொடங்கிய காலம் முதல் பள்ளி கல்லூரிகள் உட்பட அலுவலகங்கள் மூடும் நிலை ஏற்பட்டது. இதனால் பள்ளி கல்லூரிகள் மாணவர்கள் நலன் கருதி ஆன்லைன் வகுப்புகள் மேற்கொள்ள தொடங்கினர். மேலும் அலுவலகங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணி புரியும்படி அறிவுறுத்தி வருகின்றனர்.

பள்ளி கல்லூரிகள் மூடும் நிலை

பள்ளி கல்லூரிகள் மூடும் நிலை ஏற்பட்டதால் ஆசிரியர்கள் மாணவர்கள் நலன் கருதி ஆன்லைன் வகுப்புகள் மேற்கொள்ளத் தொடங்கினர். மேலும் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்தவர்களும் வீட்டில் இருந்தே பணிபுரிந்து வருகின்றனர். இதற்கு ஸ்மார்ட்போன் பிரதான தேவையாக இருந்தாலும், லேப்டாப் என்பது பிரதானமான பல்வேறு தேவைக்கும் அவசியமாக இருக்கிறது.

பாதுகாப்பாக பயன்படுத்தும் சாதனங்கள்

இதன்காரணமாக பல்வேறு தரப்பினரும் லேப்டாப் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் லேப்டாப் வைத்திருப்பவர்கள் அதன்கூடவே வைத்திருக்க வேண்டிய முக்கியமான பொருட்கள் குறித்து பார்க்கலாம். லேப்டாப் சாதனங்களை வேகமாக பயன்படுத்தவும், பாதுகாப்பாக பயன்படுத்தவும் இது பயனுள்ளதாக இருக்கும்.

லேப்டாப் ஃபேன்

லேப்டாப் ஃபேன் என்பது அவசியமான ஒன்று. இது லேப்டாப்பை அதிக வெப்பம் ஆகாமல் தடுக்கிறது. இது க்ரோம் டேப்ஸ் பலமுறை பயன்படுத்தும்போதும் சாதனத்தை சூடாக்காமல் இருக்க உதவுகிறது. 300 கூகுள் க்ரோம், ஸ்பாடிஃபை, ஸ்லேக், அவுட்லுக் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகள் பயன்படுத்தும் போதும் லேப்டாப் சூடாகாமல் பாதுகாக்கிறது. இதன் விலை ரூ.999 ஆக இருக்கிறது.

லேப்டாப் குஷன்

லேப்டாப் குஷன் என்பது முக்கியமான ஒன்று. தற்காலிமாக பணிபுரியும் இடத்திலும் ஆன்லைன் வகுப்பு மேற்கொள்ளும் இடத்திலும் லேப்டாப்பை பயன்படுத்தி வருகின்றனர். எனவே லேப்டாப்புக்கு என பாதுகாப்பு சாதனம் அவசியம். இதன் விலை ரூ.1299 ஆக இருக்கிறது.

யூஎஸ்பி டைப் சி ஹப்

யூஎஸ்பி டைப் சி ஹப் என்பது பல்வேறு சாதனங்களை இணைக்கும் கருவியாக இருக்கிறது. இதன் விலை ரூ.2159 ஆக உள்ளது.

பெர்சனல் யூஎஸ்பி ஃபேன்

பெர்சனல் யூஎஸ்பி ஃபேன், லேப்டாப்பில் இந்த பெர்சனல் யூஎஸ்பி ஃபேனை இணைக்கும் போது இது உங்களை சௌகரியாமாக பணியாற்ற அனுமதிக்கிறது. எந்த வெப்பநிலையிலும் காற்றோட்டத்தோடு உங்களை வைக்கிறது. இதன் விலை ரூ.399 ஆக உள்ளது.

பேடட் லேப்டாப் ஸ்லீவ்

பேடட் லேப்டாப் ஸ்லீவ், இது லேப்டாப் பயன்பாட்டில் இல்லாத சமயத்தில் பாதுகாப்பாக அதை தற்காத்துக் கொள்ள உதவுகிறது. இது சௌகரியாமாக ஒரு சூட்கேஸ் போல் லேப்டாப்பை உள்வைக்க உதவுகிறது. இதன் விலை ரூ.452 ஆக இருக்கிறது.
அட்ஜஸ்டபிள் யூஎஸ்பி ரீடிங் லேம்ப்
அட்ஜஸ்டபிள் யூஎஸ்பி ரீடிங் லேம்ப்

அதேபோல் அட்ஜஸ்டபிள் யூஎஸ்பி ரீடிங் லேம்ப், இது லேப்டாப் பயன்படுத்தும் கூடுதல் வெளிச்சம் தேவைப்பால் இதை லேப்டாப் உடன் இணைத்து ஒளிர வைக்கலாம். இதன்மூலம் கூடுதல் ஒளியை பெறலாம். இதன் விலை ரூ.349 ஆக இருக்கிறது.

ஸ்க்ரீன் ப்ரொடக்டர்

ஸ்க்ரீன் ப்ரொடக்டர், ஸ்மார்ட்போன் முதல் லேப்டாப் என பல்வேறு சாதனங்களுக்கும் ஸ்க்ரீன் ப்ரொடக்டர் என்பது கட்டாயமாகும். இது லேப்டாப் ஸ்க்ரீனை பாதுகாப்பாக பயன்படுத்த உதவுகிறது. இதன் விலை ரூ.2599 ஆக உள்ளது.

ப்ளூடூத் மவுஸ்

ப்ளூடூத் மவுஸ், பல்வேறு தரப்பினரும் இந்த சாதனத்தை பயன்படுத்துவார்கள். லேப்டாப்புடன் ப்ளூடூத் மவுஸ் என்பது உங்களை சௌகரியமான பயன்பாட்டை மேற்கொள்ள அனுமதிக்கும். இதன் விலை ரூ.1280 முதல் தொடங்குகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக