அது என்னென்ன மாற்றங்கள்? இதனால் சாதகமென்ன? பாதகமென்ன? யாருக்கு என்ன பலன் என்பதைத் தான் இந்த கட்டுரையில் பார்க்கவிருக்கிறோம்.
என்னென்ன கட்டணங்கள் அதிகரிக்க போகின்றன?
ஐசிஐசிஐ வங்கியின் இந்த புதிய கட்டண விகிதங்கள் ஆகஸ்ட் 1, 2021 முதல் அமலுக்கு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது கேஸ் டிரான்ஸாக்சன், காசோலைக்கான கட்டண விகிதங்கள், ஏடிஎம் கட்டணங்கள் என பலவும் மாறவுள்ளன. அதெல்லாம் சரி இந்த கட்டணங்கள் எவ்வளவு அதிகரிக்கப்பட்டுள்ளன.
ரெகுலர் சேமிப்பு / சேமிப்பு கணக்கு
ரெகுலர் சேமிப்பு / சேமிப்பு கணக்கில் என்ன மாற்றங்கள் பண பரிவர்த்தனை கட்டணங்கள் (Sum total deposits and withdrawals) என்று பார்க்கும்போது, மாதத்திற்கு முதல் 4 பரிவர்த்தனைகள் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 150 ரூபாய் கட்டணமாகும்.
தொகை வரம்பு
ரெகுலர் சேமிப்பு / சேமிப்பு கணக்கில் தொகை வரம்பு அதெல்லாம் சரி, எவ்வளவு தொகை அதிகபட்சம் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். குறிப்பாக உங்களது வங்கிக் கணக்கு தொடங்கிய கிளையில் எவ்வளவு? மற்ற கிளையில் எவ்வளவு பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். ஹோம் பிரான்ச் எனில், ஒரு கணக்கிற்கு மாதம் 1 லட்சம் வரையில் இலவசமாக பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். 1 லட்சத்திற்கு அதிகமாக செய்யும் பர்வர்த்தனையில், 1000 ரூபாய்க்கு 5 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். (subject to a minimum of Rs 150) ஹோம் பிரான்ச் அல்லாத மற்ற கிளை எனில், ஒரு நாளைக்கு 25,000 ரூபாய் வரையில் கட்டணம் இல்லை. 25,000 ரூபாய்க்கு மேல் செய்யும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 1000 ரூபாய்க்கு 5 ரூபாய் கட்டணமாகும். (subject to a minimum of Rs 150)
மூன்றாம் நபர் ரெகுலர் சேமிப்பு / சேமிப்பு கணக்கில்
மூன்றாம் நபர் பரிவர்த்தனை ஒரு நாளைக்கு 25,000 ரூபாய் வரை பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கப்படுகிறது. இதற்கு கட்டணமாக 150 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எனினும் 25,000 ரூபாய்க்கு மேல் அனுமதியில்லை. இதே மூத்த குடிமக்கள், Young Star/Smart Star Accounts கணக்குகளுக்கு ஒரு நாளைக்கு 25,000 ரூபாய் வரை பரிவர்த்தனை வரம்பு உண்டு. எனினும் கட்டணம் இல்லை.
சில்வர் சேமிப்பு/ சம்பள கணக்கு
சில்வர் சேமிப்பு/ சம்பள கணக்கில் (Sum total deposits and withdrawals), மாதத்திற்கு 4 இலவச பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம். அதற்கு மேற்பட்ட ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும், 150 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.
சம்பள கணக்கு சில்வர் சேமிப்பு / சம்பள கணக்கு - தொகை வரம்பு இதே தொகை வரம்பு என எடுத்துக் கொண்டால் ((Sum total deposits and withdrawals) ஹோம் பிரான்ச் எனில், ஒரு கணக்கிற்கு மாதம் 1 லட்சம் வரையில் இலவசமாக பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். 1 லட்சத்திற்கு அதிகமாக செய்யும் பர்வர்த்தனையில் 1000 ரூபாய்க்கு 5 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். (subject to a minimum of Rs 150) ஹோம் பிரான்ச் அல்லாத மற்ற கிளைகளில், ஒரு நாளைக்கு 25,000 ரூபாய் வரையில் கட்டணம் இல்லை. 25,000 ரூபாய்க்கு மேல் செய்யும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 1000 ரூபாய்க்கு 5 ரூபாய் கட்டணமாகும். (subject to a minimum of Rs 150)
சம்பள கணக்கில் - மூன்றாம் தரப்பு சில்வர் சேமிப்பு / சம்பள கணக்கில்
மூன்றாம் தரப்பு கட்டணம் ஒரு நாளைக்கு 25,000 ரூபாய் வரை பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கப்படுகிறது. இதற்கு கட்டணமாக 150 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எனினும் 25,000 ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்ய அனுமதியில்லை. மற்ற சேமிப்பு கணக்குகளை போலவே, மூத்த குடிமக்கள், Young Star/Smart Star Accounts கணக்குகளுக்கு ஒரு நாளைக்கு 25,000 ரூபாய் வரை பரிவர்த்தனை வரம்பு உண்டு. எனினும் கட்டணம் இல்லை.
Gold Privilege Savings / Salary Accounts கோல்டு (Gold Privilege Savings / Salary Accounts)
இந்த சம்பள கணக்கில் மாதத்திற்கு 5 பரிவர்த்தனைகள் செய்து கொள்ளலாம். இந்த கணக்கில் அதற்கு மேற்கொண்டு பரிவர்த்தனை செய்யும்போது 150 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். இதே தொகை வரம்பில் எடுத்துக் கொண்டால், ஹோம் பிரான்ச் அல்லது மற்ற கிளைகளில் 1 லட்சம் ரூபாய் வரையில், ஒரு மாதத்திற்கு இலவசமாக பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். இதே 1 லட்சம் ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்யும்போது 1000 ரூபாய்க்கு 5 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது மூன்றாம் தரப்பினருக்கும் பொருந்தும். (subject to a minimum of Rs 150)
ஏடிஎம் கட்டணங்கள் எவ்வளவு?
டெல்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைத்ராபாத், மும்பை உள்ளிட்ட ஆறு நகரங்களில் முதல் 3 பரிவர்த்தனைகள் இலவசமாகும். (inclusive of financial and non-financial) இவை தவிர மற்ற பகுதிகளில் மாதத்திற்கு முதல் 5 பரிவர்த்தனைகள் இலவசமாகும். அதிகபட்ச பரிவர்த்தனைகளுக்கு ஒவ்வொரு நிதி ரீதியிலான பரிவர்த்தனைகளுக்கு 20 ரூபாய் கட்டணமாகும். நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு 8.50 ரூபாய் கட்டணமாகும்.
செக் புக் காசோலை கட்டணம்
ஒரு வருடத்திற்கு 25 காசோலைகளுக்கு கட்டணம் இல்லை. அதற்கு மேற்பட 10 காசோலைகள் கொண்ட ஒவ்வொரு புத்தகத்திற்கும் 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேற்கண்ட கட்டணத்துடன் ஜிஎஸ்டி கட்டணமும் சேரும்.
உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக