Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 5 ஜூலை, 2021

பங்குசந்தை முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. விரைவில் சோமேட்டோ ஐபிஓ வெளியிடலாம்.. !

முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி வணிகத்தில் இருக்கும் சோமேட்டோ நிறுவனம், பல வருடங்களாகவே, பொது பங்கு வெளியீடு குறித்து திட்டமிட்டு வருகின்றது. இந்த நிலையில் ஐபிஓ-க்காக செபியிடம் விண்ணப்பித்திருந்தது.

இதற்கிடையில் தான் சோமேட்டோவின் இந்த பொதுப்பங்கு வெளியீட்டிற்காக, இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி ஒப்புதல் அளித்துள்ளது.


செபி ஒப்புதலையடுத்து சோமேட்டோ இந்த மாதத்தில் எப்போது வேண்டுமானாலும், தனது பொதுப் பங்கினை வெளிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பங்கு வெளியிட விண்ணப்பம்

சோமேட்டோ நிறுவனம் தனது பங்கு வெளியீடு மூலம் 8250 கோடி ரூபாய் நிதியினை திரட்ட விண்ணப்பித்து இருந்தது. ஆன்லைன் உணவு டெலிவரி வர்த்தகத்தில் ஈடுபடும் இந்த நிறுவனம், தனது நிறுவனத்தினை மேம்படுத்த தொடர்ந்து சர்வதேச அளவில் நிதியினை திரட்டி வருகின்றது.

IPO-மூலம் நிதி திரட்டல்

சீனாவின் ஆண்ட் குழுமத்தின் ஆதரவுடன் செயல்பட்டு சோமேட்டோ நிறுவனம், அதன் பொது பங்கு வெளியீடு மூலமாக 8,250 கோடி ரூபாய் நிதியினை திட்டமிட்டுள்ளது. இதற்காக கடந்த ஏப்ரல் மாதமே இதற்காக விண்ணப்பித்தும் இருந்தது. இது கடந்த ஒரு வருடத்தில் மிகப்பெரிய பொது பங்கு வெளியீடாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

கடுமையான போட்டி

வளர்ந்து வரும் ஆன்லைன் சந்தையில் ஸ்விக்கி, சோமேட்டோ உள்ளிட்ட பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதிலும் ஆன்லைன் சந்தையில் தங்களது நிறுவனம் முதன்மை இடத்தினை பிடிக்க, இந்த நிறுவனங்கள் கடுமையான போட்டி போட்டு கொண்டு சலுகைகள், தள்ளுபடிகள், ஆஃபர்கள் என பல வகையிலும் தங்களது வியாபாரத்தினை துரிதப்படுத்தி வருகின்றன.

எவ்வளவு மதிப்பு?

இந்த ஐபிஓ முலம் அதன் ஆரம்பகால முதலீட்டாளரான Info Edge India Ltd நிறுவனம் 7,500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளையும், சோமேட்டோ 750 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளையும் வெளியிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஆன்லைன் வணிகம் மேம்பட்டு வரும் நிலையில், இனி வரும் காலத்தில் இந்த நிறுவனங்களுக்கான எதிர்காலம் சிறப்பாக இருக்கலாம்.

எப்போது ஐபிஓ?

ஆக நீண்டாக நோக்கில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு தான். சோமேட்டோ நிறுவனம் ஏற்கனவே மிகப்பெரிய அளவில் தனது நிறுவனத்தினை மேம்படுத்த நிதியினை திரட்டியுள்ள நிலையில், இந்த பங்கு வெளியீட்டின் மூலமும் மிகப்பெரிய அளவிலான நிதியினை திரட்ட முடிவு செய்துள்ளது.

இந்தாண்டின் முதல் பாதியில் இருக்கலாம்

விரைவில் இந்த பங்கு வெளியீடு வரலாம் என்றாலும், இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. எனினும் இது குறித்து கடந்த ஆண்டில் இந்த நிறுவனத்தின் தலைவர் தீபீந்தர் கோயல் 2021ம் நிதியாண்டின் முதல் பாதியில் பங்கு வெளியீடு இருக்கலாம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக