Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 17 ஜூலை, 2021

வெறும் 10 நிமிஷம் தான், துவங்கிய வேகத்தில் நிறைவு பெற்ற ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்கிற்கான முன்பதிவு!!

வெறும் 10 நிமிஷம் தான், துவங்கிய வேகத்தில் நிறைவு பெற்ற ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்கிற்கான முன்பதிவு!!

மீண்டும் துவங்கப்பட்ட ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகள், துவங்கப்பட்ட வெறும் 10 நிமிடங்களில் நிறைவடைந்துள்ளன. வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ள இந்த நிகழ்வினை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ரத்தன் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான ரிவோல்ட் மோட்டார்ஸ் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் விற்பனையில் புதிய புரட்சியை நிகழ்த்தி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனெனில் ரிவோல்ட்டின் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கிற்கு எதிர்பார்த்ததை காட்டிலும் அதிக வரவேற்பு இந்திய வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைத்து வருகிறது. ஆர்வி400 மற்றும் ஆர்வி300 இ-பைக்குகளுக்கு முன்னதாக கடந்த ஜூன் மாதத்தில் முன்பதிவு துவங்கப்பட்டது.

தயாரிப்பு நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஆர்வி400 & ஆர்வி300 இ-பைக்குகளுக்கான இந்த முன்பதிவு சில நாட்களுக்கு மட்டுமே நடைபெறும், அதன்பின் நிறைவு பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில மணிநேரங்களிலேயே நிறைவு பெற்றது.

இம்முறை அதனை காட்டிலும் விரைவாக வெறும் பத்தே நிமிடங்களில் நிர்ணயிக்கப்பட்ட ரிவோல்ட் ஆர்வி400 இ-பைக்குகள் விற்று தீர்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முன்பதிவுகள் ரிவோல்ட்டின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் நடத்தப்பட்டன.

இந்த வகையில் பார்த்தோமேயானால், வெறும் 1 மாத கால இடைவெளியில் எலக்ட்ரிக் பைக்குகள் மீதான, அதிலும் குறிப்பாக ரிவோல்ட் இ-பைக்குகள் மீதான வாடிக்கையாளர்களின் கவனம் பல மடங்கு அதிகரித்துள்ளது என்பது தெரிய வருகிறது.

இதற்கு முக்கிய காரணமாக, சதத்தை தொட்டுள்ள பெட்ரோலின் விலையை சொல்லலாம். இதனாலேயே பலருக்கு பெட்ரோல் பைக்குகள் மீது ஒருவித வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இதுவே அத்தகையவர்களை எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களின் பக்கம் செல்ல வைத்துள்ளது.

ஏனெனில் ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்குகளில் 100கிமீ தூரத்தை வெறும் ரூ.9 செலவில் பயணிக்கலாம். ஆனால் பெட்ரோல் பைக்குகளில் சராசரியாக ரூ.250 வரையில் செலவாகிறது. 3.24 kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பை பெறுகின்ற ரிவோல்ட் ஆர்வி400 பைக்கின் ரேஞ்ச் 150கிமீ-களாக உள்ளது.

ரேஞ்ச் என்பது 100% பேட்டரி சார்ஜில் இருந்து 0% வரையில் அதிகப்பட்சமாக எலக்ட்ரிக் பைக் இயங்கக்கூடிய தொலைவாகும். அதிகப்பட்சமாக மணிக்கு 85கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய ஆர்வி400 பைக்கில் மைரிவோல்ட் செயலி முக்கிய அம்சமாக வழங்கப்படுகிறது.

ரிவோல்ட்டின் இந்த இரு எலக்ட்ரிக் பைக்குகளிலும் ஈக்கோ, நார்மல் & ஸ்போர்ட் என்ற மூன்று ரைடிங் மோட்கள் வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை வாங்க ஊக்குவிக்கும் விதமாக சில மாநில அரசாங்கங்கள் சலுகைகளை அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக