Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 21 ஜூலை, 2021

பட்ஜெட் விலையில் புதிய இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே விலை

இன்பினிக்ஸ் நிறுவனம் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த சாதனம் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் புதிய மெமரி வேரியண்டை தவிர ஸ்மார்ட்போனின் அம்சங்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே விலை

இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போன் ஆனது பர்பில், ஏஜியன் புளூ மற்றும் அப்சிடியன் பிளாக் நிறங்களில் கிடைக்கும். மேலும்4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெரி கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,999-ஆக உள்ளது. பின்பு இதன்3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை ரூ.7,999-என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.82-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே

இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே ஸ்மார்ட்போன் ஆனது 6.82-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,640 பிக்சல் தீர்மானம், 20.5:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

XOS 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்

இந்த இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி25 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே ஸ்மார்ட்போனில் XOS 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே சாதனத்தில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

13எம்பி பிரைமரி சென்சார்

இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + ஏஐ லென்ஸ் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்தஅசத்தலான ஸ்மார்ட்போன்.

6000 எம்ஏஎச் பேட்டரி

இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் கைரேகை சென்சார் வசதி உட்பட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். வைஃபை, 4 ஜி, புளூடூத், ஜி.பி.எஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி போர்ட் மற்றும் எஃப்.எம் ரேடியோ உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது
இந்த இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே ஸ்மார்ட்போன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!