Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 21 ஜூலை, 2021

வெறும் ரூ.15,000-த்துக்கு கீழ் கிடைக்கும் சிறந்த டாப்-5 ஸ்மார்ட்டிவிகள் இதுதான்!

 ஓடிடி தளத்திலேயே வெளியாகும் திரைப்படங்கள்

டிவிகள் பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. அடுப்பு இல்லாத வீடுகள் கூட கண்டறியலாம் ஆனால் டிவிகள் இல்லாத வீடு என்பது அபூர்வமாகி வருகிறது. அதற்கேற்ப இந்திய சந்தையில் ஸ்மார்ட்டிவிகள் விலை நாளுக்கு நாள் மலிவாகி வருகின்றன. அதேபோல் தரம் மற்றும் அம்சங்களும் சிறப்பு வாய்ந்தவையாக இருக்கிறது.

ஓடிடி தளத்திலேயே வெளியாகும் திரைப்படங்கள்

தியேட்டர் மூடிவரும் காரணத்தால் புதுத் திரைப்படங்கள் ஓடிடி தளத்திலேயே வெளியாகி வருகின்றன. இதை பார்ப்பதற்கு சிறந்த திரை அனுபவம் மிக்க ஸ்மார்ட்டிவிகளை வாங்குவதற்கு மக்கள் ஆர்வம்காட்டி வருகின்றனர். 32 இன்ச் ஸ்மார்ட்டிவியே பெரும்பாலானோரின் தேவையாக இருக்கிறது. ஒருசில சிறிய டிவியை நீங்கள் மானிட்டராகவும் மாற்றலாம். இதில் ரூ.15,000-த்துக்கு கீழ் கிடைக்கும் ஸ்மார்ட் டிவிகள் குறித்து பார்க்கலாம்.

iFFALCON 32-inch HD ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்டிவி

இஃபால்கான் ஸ்மார்ட் எல்இடி டிவி 32F2A மாடல் ரூ.13,499-க்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது 720 பிக்சல் தீர்மானத்தோடு ஏ+ கிரேடு அனுபவத்தை கொண்டிருக்கிறது. இதன் எச்டி தீர்மானம் போதுமான அளவைவிட அதிகமாக இருக்கிறது. நீங்கள் எச்டிஎம்ஐ போர்ட்கள், 1 யூஎஸ்பி போர்ட், பில்ட்-இன் வைஃபை, யூஎஸ்பி சப்போர்ட் ஆகியவையோடு வருகிறது.

ஆண்ட்ராய்டு 9 பை ஆதரவு

எச்டிஆர் தர ஆதரவை கொண்டுள்ளது. இது அதிகபட மாறுபாட்டு அனுபவத்தை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்டிவி ஆண்ட்ராய்டு 9 பை உடன் இயக்கப்படுகிறது. மேலும் ப்ளே ஸ்டோர் மூலமாக 5000+ பயன்பாடுகளை பதிவிறக்கம் செய்யலாம். இதில் கூகுள் அசிஸ்டென்ட் ஆதரவும் இருக்கிறது. டால்பி ஆடியோ ஆதரவோடு 20 வாட்ஸ் இரட்டை ஸ்பீக்கர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி உள்சேமிப்பு அம்சத்தோடு வருகிறது.

Kevin 32 இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவி

கெவின் 32 இன்ச் ஸ்மார்ட்டிவி K32CV338H மாடல் ரூ.14,499 விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவி அமேசானில் 7000+ மதிப்பீடுகளை கொண்டிருக்கிறது. கெவின் டிவி 2021 மாடல் பல ஸ்மார்ட் அம்சங்களை கொண்டுள்ளது. நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஜீ 5, சோனி லைவ், யூடியூப் போன்ற பல பயன்பாடுகளின் ஆதரவுகளை கொண்டுள்ளது.

இந்த டிஸ்ப்ளே காட்சி 720 பிக்சல் தெளிவுத்திறன் மற்றும் 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவி ஆண்ட்ராய்டு ஓடிஏ புதுப்பிப்புகளை கொண்டுள்ளது. எச்ஆர்டிடி தொழில்நுட்ப அம்சத்தையும் இது கொண்டிருக்கிறது. 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர் அமைப்பு மூலமாக 30 வாட்ஸ் ஒலி வெளியீடு கிடைக்கிறது. 2 எச்டிஎம்ஐ போர்ட்கள், 2 யூஎஸ்பி போர்ட்கள், வைஃபை ஆதரவு ஆகியவை உள்ளது.

கோடக் 32 இன்ச் எச்டி ஆண்ட்ராய்டு எல்இடி டிவி 32HDX7XPRO

ரூ.15000-க்கு கீழ் கிடைக்கும் முதல் 5 ஸ்மார்ட்டிவிகளில் ஒன்று இதுவாகும். கோடக் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்டிவியானது 60 வாட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வருகிறது. மேலும் இதில் 720 பிக்சல் தெளிவுத்திறன் காட்சி மற்றும் 24 வாட்ஸ் வெளியீட்டு ஸ்பீக்கர்களை கொண்டுள்ளன. ஆண்ட்ராய்டு 9-பை ஆதரவோடு இது வருகிறது. கோர்டெக்ஸ் ஏ53 குவாட் கோர் செயலி மூலம் இது இயக்கப்படுகிறது.

பல்வேறு இணைப்பு ஆதரவுகள்

கூகுள் அசிஸ்டென்ட், அமேசான் பிரைம், யூடியூப் மற்றும் சோனி லைவ் ஆகிய ஆதரவுகள் இதில் இருக்கிறது. இதன் ரிமோட்களில் பிரத்யேகமாக ஹாட்ஸ்கீகளும் உள்ளன. 500 நிட்ஸ் பிரகாசத்தை இது கொண்டுள்ளது. இதில் 3 எச்டிஎம்ஐ போர்ட்கள், 2 யூஎஸ்பி போர்ட்கள் மற்றும் வைஃபை ஆதரவுகள் உள்ளன.

விடபிள்யூ 24 இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட்டிவி

விடபிள்யூ 24 இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட்டிவி VW24S மாடல் ரூ.15000-க்கு கீழ் கிடைக்கும் சாதனமாகும். இது 24 இன்ச் அளவோடு வருகிறது. இதன் பேனலில் 720 பிக்சல் தீர்மானம் இருக்கிறது. கூடுதல் அம்சங்களாக வைஃபை, ஸ்கிரீன் மிரரிங், பிசி இணைப்பு மற்றும் வயர்லெஸ் ஆதரவுகளோடு வருகிறது.

இது ஏ+ கிரேடு பேனலோடு வருகிறது. இதில் 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத காட்சி இருக்கிறது. 20 வாட்ஸ் ஒலி வெளியிடக்கூடிய ஒரு ஜோடி ஸ்பீக்கர்கள் இதில் உள்ளன. இதில் 512 எம்பி ரேம் மற்றும் 4 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது.

மைக்ரோமேக்ஸ் 32 இன்ச் எச்டி ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்டிவி

மைக்ரோமேக்ஸ் வழங்கும் இந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்டிவியின் விலை ரூ.14,999 ஆக இருக்கிறது. மேலும் இது 720 பிக்சல் ஏ+ கிரேடு பேனலோடு வருகிறது. இது ஆண்ட்ராய்டு 9 பை ஆதரவோடு வருகிறது. மேலும் இந்த டிவியானது 1.5 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவி டூயல் கோர் கிராபிக்ஸ் செயலி மூலம் இயக்கப்படுகிறது.

இதன் இணைப்பிற்கு 2 எச்டிஎம்ஐ போர்ட்கள், 2 யூஎஸ்பி போர்ட்கள் உள்ளமைக்கப்பட்ட வைஃபை ஆகியவை உள்ளன. இது ப்ளூடூத் இணைப்பு டிவியாகும். இதில் ஸ்லீப் டைமர் அம்சம் இருக்கிறது. இது ஆற்றலை சேமிக்க பயன்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக