
Pegasus spyware தற்போது நாடு முழுவதும் ஒரு விவாதப் பொருளாக உள்ளது. முன்னதாக 2019 ஆம் ஆண்டில், இது குறித்து கேள்விப்பட்டபோது, பல வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் தொலைபேசி பெகாசஸால் ஹேக் செய்யப்பட்டதாக புகார் கூறினர். இவர்களில் பல ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களும் இருந்தனர்.
மக்களின் தொலைபேசிகள் ஹேக் செய்யப்படுகின்றன என்று பெரும்பாலும் அறிக்கைகளில் வருவதை நாம் அவ்வப்போது பார்க்கிறோம். ஆனால் அவை எவ்வாறு நிகழ்கின்றன, அவற்றைத் தவிர்ப்பதற்கான வழி என்ன என்பது நமக்குத் தெரிவதில்லை.
பெகாசஸ் மென்பொருளை இந்த குழு உருவாக்கியுள்ளது
பெகாசஸ் (Pegasus) என்பது இஸ்ரேலிய குழு NSO ஆல் உருவாக்கப்பட்ட ஒரு ஸ்பைவேர் ஆகும். 2016 ஆம் ஆண்டு ஒரு அரபு ஆர்வலருக்கு சந்தேகத்திற்கிடமான செய்தி வந்ததை அடுத்து இந்த ஸ்பைவேர் பற்றி செய்திகளில் வந்தது. Pegasus ஐபோன் பயனர்களை மட்டுமே குறிவைக்கிறது என்று முன்னர் நம்பப்பட்டது. ஆனால் இது ஐபோன் பயனர்களை மட்டுமல்லாமல் ஆண்ட்ராய்டு பயனர்களையும் தனது இலக்காக்குகிறது என்று ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளன.
இது உங்கள் தொலைபேசியை எவ்வாறு பாதிக்கிறது?
Pegasus உங்கள் தொலைபேசியை ஹேக் செய்து உங்கள் வாட்ஸ்அப் எண்ட்-டு-எண்ட் மறைகுறியாக்கப்பட்ட சேட்களை அணுகக்கூடும். இதனால், உங்கள் செய்திகளையும் (Messages) அழைப்புகளையும் (Calls) கண்காணிக்க முடியும். இது தவிர, இதனால் உங்கள் செயலியின் செயல்பாட்டையும் கண்காணிக்க முடியும். இது மட்டுமல்லாமல், இது உங்கள் இருப்பிடம், தரவு மற்றும் வீடியோ கேமராவையும் எளிதாக அணுகிவிடும் திறன் கொண்டது.
பெகாசஸ் ஸ்பைவேருக்கு எதிராக உங்கள் போனை எவ்வாறு பாதுகாப்பது
இந்த ஸ்பைவேரை தவிர்க்க விரும்பினால், நீங்கள் பல விஷயங்களை கவனித்துக் கொள்ள வேண்டும். பல நிறுவனங்கள் தங்கள் செயலிகளில் உயர் மட்ட பாதுகாப்பை வழங்குகின்றன. நிறுவனங்கள் அவ்வப்போது அவற்றை புதுப்பித்துக்கொண்டே இருக்கின்றன.
பயனர்கள் செயலிகளின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பைப் பயன்படுத்த வேண்டும். இப்படி செய்வதால், உங்கள் தொலைபேசி ஹேக் (Hacking) செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறைக்கின்றன.
சில நாட்களுக்கு ஒரு முறை, நீங்கள் உங்கள் சமூக ஊடக கணக்குகளின் பாதுகாப்பை செக் செய்ய வேண்டும். சந்தேகத்திற்குரிய வகையில் எதாவது இணைப்பு உங்களுக்கு வந்தால், அத்தகைய இணைப்பை உடனடியாக தொலைபேசியிலிருந்து நீக்கிவிட வேண்டும். கண்டிப்பாக அதை கிளிக் செய்யக்கூடாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக