வெள்ளி, 23 ஜூலை, 2021

மீண்டும் பீதியைக் கிளப்பும் சீனா: 15,000 ஆண்டு பழமையான வைரஸ்கள் அழியாமல் கண்டுபிடிப்பு.. திடுக்கிடும் தகவல்.!

15,000 ஆண்டுகள் பழமையான வைரஸ்கள் சீனாவில் கண்டுபிடிப்பா?

பனிப்பிரதேசங்களில் பனிப்பாறைகளை ஆய்வு செய்து படிக்கும் விஞ்ஞானிகள் தற்பொழுது சீனாவின் திபெத்திய பீடபூமியில் இருந்து எடுக்கப்பட்ட இரண்டு பனி மாதிரிகளில் கிட்டத்தட்ட 15,000 ஆண்டுகள் பழமையான வைரஸ்களைக் கண்டறிந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும், இந்த வைரஸ்களில் பெரும்பாலானவை உறை நிலையில் இத்தனை ஆண்டுகளாக இருந்ததால் இன்னும் அழியாமல் இருக்கிறது என்ற திடுக்கிடும் உண்மையை விஞ்ஞானிகள் தற்பொழுது வெளியிட்டுள்ளனர்.

15,000 ஆண்டுகள் பழமையான வைரஸ்கள் சீனாவில் கண்டுபிடிப்பா?

சீனா செய்யும் காரியங்கள் பெரும்பாலும் இப்போது உலக நாடுகளை அச்சுறுத்துவது போல தெரிகிறது. அதிலும், சமீபத்தில் சீன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் பெரும் பீதியை தற்பொழுது கிளப்பியுள்ளது. பனிப்பாறைகளை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகளால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 15 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வைரஸ்கள் பனிப்பாறைக்குள் அழியாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று வரை பட்டியலிடப்பட்டுள்ள எந்த வைரஸ்களையும் போல் இவை இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

பனிப்பாறையில் தூசி, வாயுக்களுடன் பல வைரஸ்கள் கண்டுபிடிப்பு

''விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பனிப்பாறைகள் இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் படிப்படியாக உருவாக்கப்பட்டது என்றும், இதில் தூசி மற்றும் வாயுக்களுடன், பல வைரஸ்கள் அந்த பனியில் தேங்கியுள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்'' என்று இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியரும், ஓஹியோ மாநில பல்கலைக்கழக பைர்ட் போலார் மற்றும் காலநிலை ஆராய்ச்சியின் ஆராய்ச்சியாளருமான ஜி-பிங் ஜாங் கூறியுள்ளார்.

22,000 அடி உயர உச்சியில் சேகரிக்கப்பட்ட மாதிரியில் பழைமையான வைரஸ்கள்

22,000 அடி உயர உச்சியில் சேகரிக்கப்பட்ட மாதிரியில் பழைமையான வைரஸ்கள்

நுண்ணுயிரியலில் கவனம் செலுத்தும் மையம், மேற்கு சீனாவில் உள்ள பனிப்பாறைகள் இன்னும் நன்கு ஆய்வு செய்யப்படவில்லை என்று கூறியுள்ளது. மேற்கு சீனாவின் குலியா பனிக்கட்டியில் இருந்து 2015 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பனிக்கட்டிகளை ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஆய்வு செய்தனர். இந்த பனிப்பாறை தோன்றிய குலியாவின் உச்சி கடல் மட்டத்திலிருந்து 22,000 அடி உயரத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பனிக் கோர்கள் அதிக உயரத்தில் இருந்து சேகரிக்கப்பட்டது என்பதை இது காட்டுகிறது.

காலநிலை மாற்றம், நுண்ணுயிரிகள், வைரஸ்கள் பற்றிய வரலாற்றை ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள்

காலநிலை மாற்றம், நுண்ணுயிரிகள், வைரஸ்கள் பற்றிய வரலாற்றை ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள்

இந்த பனி கோர்களில் பல பனி அடுக்குகள் உள்ளன என்றும், இவை ஆண்டுதோறும் குவிந்து, ஒவ்வொரு அடுக்கையும் உறைய வைக்கும் நேரத்தில் அவற்றைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தில் சிக்கியுள்ள அனைத்தையும் தன்னுள் வைத்து உறைந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த அடுக்குகள் ஒரு காலவரிசையை உருவாக்குகின்றது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், இதன் உதவியுடன் காலநிலை மாற்றம், நுண்ணுயிரிகள், வைரஸ்கள் மற்றும் வாயுக்கள் பற்றிய வரலாற்றை நாம் முழுவதுமாக புரிந்துகொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

​33 வைரஸ்களுக்கான மரபணு குறியீடு கண்டுபிடிப்பு

இந்த பனி மாதிரியைப் பாரம்பரிய மற்றும் புதிய நுட்பங்களின் கலவையைப் பயன்படுத்தி இதன் வயதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பனி கிட்டத்தட்ட 15,000 ஆண்டுகள் பழமையானது என்று ஆராய்ச்சியாளர்கள் தீர்மானித்துள்ளனர். விஞ்ஞானிகள் பனியைப் பகுப்பாய்வு செய்தபோது, ​அதில் ​33 வைரஸ்களுக்கான மரபணு குறியீடுகளைக் கண்டறிந்துள்ளனர். அந்த வைரஸ்களில் நான்கு வைரஸ்கள் ஏற்கனவே அறிவியல் சமூகத்தால் அடையாளம் காணப்பட்ட வைரஸ்கள் தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

28 நாவல் வகை வைரஸ்களில் பாதி இன்னும் அழியாமல் இருக்கிறதா?

ஆனால் அவற்றில் குறைந்தது 28 நாவல் வகை வைரஸ்கள் இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் சந்தேகித்துள்ளனர். இந்த 28 நாவல் வகை வைரஸ்களில் பாதி வைரஸ்கள் முழுமையாக இத்தனை ஆண்டுகளாகப் பனிக்கட்டிக்குள் உறைந்து இருந்தபோதிலும், இன்று வரை அழியாமல் தப்பிப்பிழைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தாலும் கூட, விஞ்ஞானிகள் இந்த கண்டுபிடிப்பு கிடைத்ததை நினைத்து அதிக ஆர்வமாக இருக்கின்றனர்.

வைரஸ்கள் மீண்டும் பூமியைப் புரட்டிப் போடாமல் இருந்தால் சரி

காரணம், பல நூற்றாண்டுகளாக வைரஸ்கள் எவ்வாறு உருவாகியுள்ளன என்பதை விஞ்ஞானிகள் புரிந்துகொள்ள இது பெரிதும் உதவும் என்று கூறப்படுகிறது. இந்த ஆய்வுக்காக, விஞ்ஞானிகள் பனியில் உள்ள நுண்ணுயிரிகள் மற்றும் வைரஸ்களை மாசுபடுத்தாமல் பகுப்பாய்வு செய்யும் புதிய, அதி-சுத்தமான முறையையும் உருவாக்கி ஆராய்ச்சியைத் துவங்கியுள்ளனர் என்று மைக்ரோபியோம் ஜூலை 20, 2021 இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வைரஸ்களாவது பூமியைப் புரட்டிப் போடாமல் இருந்தால் சரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்