Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 23 ஜூலை, 2021

டோக்கியோ ஒலிம்பிக் 2021: போட்டிகளை எந்த சேனல்களில் பார்க்கலாம்? இதோ பட்டியல்.!

 ஒலிம்பிக் 2021 போட்டிகளில்

மிகவும் அதிகம் எதிர்பார்த்த டோக்கியோ ஒலிம்பிக் 2021 போட்டிகள் இன்று அதிகாரபூர்வமாக தொடங்குகிறது. குறிப்பாக ஆகஸ்ட் 8 வரை நீடிக்கும் இந்த ஒலிம்பிக் போட்டிகளில் 33 நிகழ்வுகளில் 206 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் டோக்கியோ ஒலிம்பிக் 2021 போட்டிகளில் இந்தியா சார்பில் 120-க்கும் மேற்ப்பட்ட வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் கலந்துகொண்டு விளையாட உள்ளனர். அதேபோல் இந்த மோசமான கொரோனா தொற்றுநோய் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் பார்வையாளர்கள் இல்லாமல் நடக்க உள்ளது.

மேலும் இப்போது டோக்கியோ ஒலிம்பிக் 2021 போட்டிகளை இந்தியாவில் எப்படி? எதன்மூலம் பார்கலாம் என்பதை விரிவாகப் பார்ப்போம். அதாவது இந்தியாவில் சோனி டென் மற்றும் சோனி சிக்ஸ் சேனல்களில் டோக்கியோ ஒலிம்பிக் 2021 போட்டிகள் நேரடியாக ஒளிபரப்பப்படும். சோனி சிக்ஸ், சோனி சிக்ஸ் எச்டி, சோனி டென் 2, டென் 2 எச்டி, டென் 3, டென் 3 எச்டி, டென் 4, டென் 4 எச்டி ஆகியவைஇதில் அடங்கும். மேலும் ஒலிம்பிக் 2021 தொடக்க விழா இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இப்போது டாட்டா ஸ்கை, ஏர்டெல், டிஷ் டிவி மற்றும் டி 2 ஹெச் டி.டி.எச் உள்ளிட்ட அனைத்து முக்கிய டி.டி.எச் ஆபரேட்டர்களின் சோனி சேனல்கள் மற்றும் அவற்றின் எண்களை பற்றி விரிவாகப் பார்ப்போம்.

டோக்கியோ ஒலிம்பிக் 2021: டாடா ஸ்கை டி.டி.எச் (Tata Sky DTH) இல் சோனி சேனல் எண்கள்

சோனி டென் 2 எச்டி - 473
சோனி டென் 2 - 474
சோனி டென் 3 எச்டி - 475
சோனி டென் 3 - 476
சோனி சிக்ஸ் எச்டி - 483
சோனி சிக்ஸ் - 484

டோக்கியோ ஒலிம்பிக் 2021: ஏர்டெல் டிஜிட்டல் டிவி டி.டி.எச் (Airtel Digital TV DTH) இல் சோனி சேனல் எண்கள்

சோனி டென் 2 எச்டி - 288
சோனி டென் 2 - 287
சோனி டென் 3 எச்டி - 290
சோனி டென் 3 - 289
சோனி சிக்ஸ் எச்டி - 292
சோனி சிக்ஸ் - 291

டோக்கியோ ஒலிம்பிக் 2021: டிஷ் டிவி டி.டி.எச் (Dish TV DTH) இல் சோனி சேனல் எண்கள்

சோனி டென் 2 எச்டி - 612
சோனி டென் 2 - 613
சோனி டென் 3 எச்டி - 614
சோனி டென் 3 - 615
சோனி சிக்ஸ் - 623

டோக்கியோ ஒலிம்பிக் 2021: வீடியோகான் d2h DTH இல் சோனி சேனல் எண்கள்

சோனி டென் 2 எச்டி - 931
சோனி டென் 2 - 413
சோனி டென் 3 எச்டி - 926
சோனி டென் 3 - 415
சோனி சிக்ஸ் எச்டி - 928
சோனி சிக்ஸ் - 423

குறிப்பாக இந்திய வீரர்கள் கலந்து கொள்ளும் போட்டிகள் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் பல மொழிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த டோக்கியோ ஒலிம்பிக் 2021 போட்டிகள் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக