Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 23 ஜூலை, 2021

போஸ்ட்மேன் உதவியுடன் வீட்டு வாசலிலேயே இனி ஆதாரில் மொபைல் எண் அப்டேட் செய்யலாம்.. எப்படி தெரியுமா?

 உங்கள் பகுதியின் போஸ்ட்மேன் உதவியுடன் நீங்கள் ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்

ஆதார் ஆணையம் தற்பொழுது ஒரு புதிய சேவையை தனது ஆதார் பயனர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய அறிவிப்பின் படி, ஆதார் அட்டையை பயன்படுத்தும் தனிநபர் யாராக இருந்தாலும், அவர்கள் இப்போது அந்த பகுதியின் தபால்காரர் உதவியுடன் அவர்களின் வீட்டு வாசலிலேயே தங்கள் ஆதார் அட்டைகளில் உள்ள மொபைல் எண்களைப் அப்டேட் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சேவையைப் பொதுமக்கள் எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

உங்கள் பகுதியின் போஸ்ட்மேன் உதவியுடன் நீங்கள் ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்

இந்திய போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி மற்றும் இந்தியத் தனித்துவமான அடையாள ஆணையம் இணைந்து ஒரு புதிய ஏற்பாட்டின் கீழ் இந்த சேவையை தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, இந்தியா முழுக்க அந்தந்த பகுதிகளில் உள்ள தபால்காரர்களின் உதவியுடன் ஆதார் அட்டைதாரர்கள் இனி அவர்களின் ஆதார் அட்டையில் இருக்கும் மொபைல் எண்களைப் புதுப்பித்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இனி வீட்டு வாசலிலேயே ஆதார் மொபைல் எண் அப்டேட் சேவை

650 இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, 1.46 லட்சம் தபால்காரர்கள் மற்றும் கிராமின் டக் சேவக்ஸ் (ஜி.டி.எஸ்) நெட்வொர்க் மூலம் இந்த சேவையை ஆதார் ஆணையம் உங்கள் வீட்டின் வாசலுக்கே வந்து கிடைக்கும் படி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இனி ஆதார் பயனர்கள் தங்களின் வீட்டு வாசலிலேயே அவர்களின் மொபைல் எண்களை மாற்றம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவை இல்லாதவர்களுக்கு இது உதவும்

மொபைல் எண் புதுப்பிப்பு சேவையிலிருந்து இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் அஞ்சல் அலுவலகங்கள், அஞ்சல் ஊழியர் மற்றும் GDS க்கு டிஜிட்டல் பங்கிடுதல் மற்றும் வங்கி சேவை அல்லாத பகுதிகளில் சேவை மேற்கொள்ள இந்த புதிய வசதி பெரிதும் உதவும் என்று IPPB நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜே.வெங்கட்ரமு தனது அறிக்கையின் மூலம் தெரிவித்திருக்கிறார்.

புதிதாக சுமார் 128.99 கோடி ஆதார் எண் வெளியீடு

தற்போது, ​​ஐபிபிபி மொபைல் புதுப்பிப்பு சேவையை மட்டுமே வழங்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையாக வெகு விரைவில் அதன் நெட்வொர்க் மூலம் ஆதாரில் புதியக் குழந்தைகளுக்கான சேர்க்கை சேவையையும் இயக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான அறிவிப்புப் படி, மார்ச் 31, 2021 வரை, யுஐடிஏஐ இந்தியாவில் வசிப்பவர்களுக்கு சுமார் 128.99 கோடி ஆதார் எண்களை வெளியிட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக