Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 23 ஜூலை, 2021

ஆஹா., இப்போ தமிழகத்தில் கிடைக்கும் விஐ இ-சிம் சேவை- நம்ம ஸ்மார்ட்போனுக்கு இது செட் ஆகுமா?

 புதிய விஐ இ-சிம் இணைப்பு

தமிழகத்தில் உள்ள விஐ வாடிக்கையாளர்களும் தற்போது தங்களது முதன்மை சாதனங்களுக்கு விஐ இ-சிம் சேவையை பெறலாம். கேரளாவில் தங்களது போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இ-சிம் சேவை கிடைப்பதாக விஐ நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது முதன்மை சாதனங்களுக்கும் இ-சிம் சேவையை பயனர்கள் பெறலாம். விஐ இ-சிம் சேவையை ஆதரிக்கும் ஆப்பிள், சாம்சங், கூகுள் ஸ்மார்ட்போன்களின் பட்டியல்களை பார்க்கலாம்.

விஐ செயல்படும் ஸ்மார்ட்போன்கள்

ஆப்பிள் ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ், ஐபோன் எஸ்இ, ஐபோன் எக்ஸ், ஐபோன் எக்ஸ் மேக்ஸ், ஐபோன் எக்ஸ்ஆர், ஐபோன் 12 மினி, ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ & ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் சாதனங்களில் செயல்படும். அதேபோல் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப், சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட், சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5ஜி, சாம்சங் கேலக்ஸி நோட் 20, சாம்சங் கேலக்ஸி இசட் மடிப்பு 2, சாம்சங் கேலக்ஸி எஸ் 21 5ஜி, சாம்சங் கேலக்ஸி எஸ் 21 + 5ஜி, சாம்சங் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா 5ஜி, சாம்சங் கேலக்ஸி எஸ் 20 கேலக்ஸி எஸ் 20 +, சாம்சங் கேலக்ஸி எஸ் 20 அல்ட்ரா ஆகிய சாதனங்களிலும் இது பயன்படும்.

விஐ இ-சிம் சேவை

விஐ இ-சிம் சேவை தற்போது மும்பை, குஜராத், டெல்லி, கர்நாடகா, பஞ்சாப், உத்திரபிரதேசம், கேரளா, கொல்கத்தா. மகாராஷ்டிரா மற்றும் கோவா போன்ற பகுதிகளில் கிடைக்கிறது. இ-சிம் சேவை இயக்க விருப்பப்பட்டு அதற்கு தகுதியான சாதனங்கள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இனி சிம்கார்ட் வாங்கி அதற்கு காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

இ-சிம் தொடர்பு சேவை

"இ-சிம் மின்னஞ்சல் ஐடி என டைப் செய்து 199-க்கு எஸ்எம்எஸ் செய்யலாம். அதேபோல் மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். இதன்பிறகு தங்கள் மொபைல் எண்ணுக்கோ அல்லது மின்னஞ்சல் ஐடிக்கோ ஒரு எஸ்எம்எஸ் பெறுவீர்கள். நீங்கள் இ-சிம் கோரிக்கையை உறுதிப்படுத்த அதற்கான பதிலளிக்கும் கோரிக்கையை பெறுவீர்கள். மேலும் ஒப்புதல் வழங்கும்படி 199-ல் இருந்து ஒரு எஸ்எம்எஸ் கிடைக்கும். அனைத்து சேவையும் முடிவடைந்த பின்பு நீங்கள் க்யூஆர் குறியீட்டு உடன் கூடிய மின்னஞ்சல் தகவலை தங்கள் இமெயில் ஐடியில் பெறுவீர்கள்.

புதிய விஐ இ-சிம் இணைப்பு

அதேபோல் புதிய விஐ இ-சிம் இணைப்பை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் அவர்களது அடையாளம் மற்றும் புகைப்பட சான்று ஆகியவைகளை பார்வையிடவும். செயல்பாட்டின் போது உடனடியாக க்யூஆர் ஸ்கேன் குறியீட்டை உடனடியாக ஸ்கேன் செய்யவும். குறியீட்டை அதிகபட்சமாக 2 மணி நேரத்துக்குள் ஸ்கேன் செய்ய வேண்டும்.

விஐ கிளஸ்டர் வர்த்தக தலைவர் அறிவிப்பு

விஐ கிளஸ்டர் வர்த்தக தலைவர் எஸ்.முரளி இதுகுறித்து கூறுகையில், தமிழகத்தில் தங்கல் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இ-சிம் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் விஐ மகிழ்ச்சியடைகிறது. இது அவர்களுக்கு நெகிழ்வுத்தன்மை வாய்ந்த நன்மைகளை அனுபவிக்க உதவுகிறது. தங்களது வாடிக்கையாளர்கள் இ-சிம் மூலம் மேம்பட்ட அனுபவத்தை பெறுவார்கள் என குறிப்பிட்டார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக