Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 1 ஜூலை, 2021

பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்வு.. அமுல் அறிவிப்பால் மக்கள் கவலை..!

அமுல் பால்

இந்த 2 ரூபாய் பால் விலை உயர்வு அமுல் பிராண்ட் கீழ் இருக்கும் அனைத்து பால் வகைகளுக்கும் பொருந்தும், குறிப்பாக கோல்டு, டாசா, சக்தி, டி ஸ்பெஷல், பசும் பால், எருமை பால் என அனைத்து பால் வகைகள் மீதும் விலை உயர்வு அமலாக்கம் செய்யப்பட உள்ளது என GCMMF அமைப்பு தெரிவித்துள்ளது.

பால் விலை உயர்வு

சுமார் ஒரு வருடம் 7 மாத்திற்கு பின் விலையை உயர்த்தியுள்ள அமுல் நிறுவனம் உற்பத்தி செலவுகள் மிகவும் அதிகரித்துள்ள காரணத்தால் தவிர்க்க முடியாத நிலையில் தற்போது பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரிக்கப்பட்டு உள்ளது என GCMMF அமைப்பு விளக்கம் தெரிவித்துள்ளது.

உணவு பணவீக்கம்

நாட்டின் உணவு பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையிலும் போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ள காரணத்தாலும் பால் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் தாங்கள் தள்ளப்பட்டு உள்ளோம் என GCMMF அமைப்பின் தலைவர் ஆர்எஸ் சோதி தெரிவித்துள்ளார்

செலவுகள் அதிகரிப்பு

மேலும் இவர் கூறுகையில், கடந்த 1 வருடம் 7 மாதத்தில் பால் பேக்கேஜ் செய்யும் செலவுகள் 30 முதல் 40 சதவீதமும், போக்குவரத்து செலவுகள் 30 சதவீதம், எனர்ஜி செலவுகள் 30 சதவீதமும் அதிகரித்துள்ளது.

MRP விலை

இதன் காரணமாக அமுல் பால் பொருட்களின் விலையை 2 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது, அதாவது எம்ஆர்பி (MRP) விலையில் 4 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளோம் என GCMMF அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வமைப்பின் தலைவர் ஆர்எஸ் சோதி தெரிவித்துள்ளார்.

ரூபாய்க்கு 80 பைசா

மேலும் தற்போது உயர்த்தப்பட்டு உள்ள 2 ரூபாய் விலையின் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் வருமானம் அளிக்கப்படும், அதாவது GCMMF அமைப்பின் கொள்கை படி ஒவ்வொரு ரூபாய்க்கும் 80 பைசா தொகையை பால் உற்பத்தியாளர்களுக்கு அளிக்கப்படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக