Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 1 ஜூலை, 2021

64எம்பி ரியர் கேமராவுடன் ஹானர் எக்ஸ்20 எஸ்இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் எக்ஸ்20 எஸ்இ ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 64எம்பி ரியர் கேமரா, தனித்துவமான சிப்செட் வசதி மற்றும் 4000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த சாதனம் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த சாதனத்தின் முழு விவரங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் TFT எல்சிடி டிஸ்பிளே

ஹானர் எக்ஸ்20 எஸ்இ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் TFT எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்
மாடல் வெளிவந்துள்ளது.

Dimensity 700 சிப்செட்

ஹானர் எக்ஸ்20 எஸ்இ ஸ்மார்ட்போனில் மிகவும் எதரிபார்க்கப்பட்ட மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் Magic UI 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

ஹானர் எக்ஸ்20 எஸ்இ ஸ்மார்ட்போனல் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

64எம்பி மெயின் கேமரா

ஹானர் எக்ஸ்20 எஸ்இ சாதனத்தின் பின்புறம் 64எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக்
கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

4000 எம்ஏஎச் பேட்டரி

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 22.5 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. மேலும் கைரேகை சென்சார் உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஹானர் எக்ஸ்20 எஸ்இ ஸ்மார்ட்போன் மாடல்.

வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.1, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஹானர் எக்ஸ்20 எஸ்இ ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த சாதனத்தின் ஆரம்ப விலை (இந்திய மதிப்பில்) ரூ.20,600-ஆகஉள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக