Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 21 ஜூலை, 2021

மற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எல்லாம் ஓரம் ஒதுங்கே!! டிவிஎஸ் மோட்டாரின் கிரியோன் இ-ஸ்கூட்டர், 2022ல் அறிமுகமாகிறது

 

TVS Creon, Estimated Price 1.20 Lakh, Launch Date 2021, Images, Mileage,  Specs @ ZigWheels

ஏத்தர் 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக விரைவில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் இருந்து க்ரியோன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மீண்டும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் அதன் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக கிரியோனை சந்தையில் அறிமுகப்படுத்த பல மாதங்களாக தயாராகி வருகிறது.

ரூ.1,000 கோடி முதலீட்டில் தனது எலக்ட்ரிக் வாகன பிரிவை வலுப்படுத்த திட்டமிட்டுள்ள டிவிஎஸ் நிறுவனம் கிரியோன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட் மாடலை முதன்முதலாக 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது.

தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி, டிவிஎஸ் கிரியோன் இ-ஸ்கூட்டர் சந்தையில் அடுத்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படலாம். 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட கான்செப்ட் மாடலை போல் அச்சு அசலாக இல்லாவிடினும், கிரியோன் அந்த கான்செப்ட் மாடலின் அடிப்படையில் தான் உருவாக்கப்படுகிறது.

மிக முக்கிய சிறப்பம்சமாக புதிய அட்வான்ஸ் தொழிற்நுட்பம் மற்றும் இணைப்பு வசதிகளை இந்த டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பெற்றுவரவுள்ளது. மற்ற டிவிஎஸ் வாகனங்களை போன்று கிரியோனும் ஓசூரில் உள்ள டிவிஎஸ் நிறுவனத்தின் தொழிற்சாலையில் தான் தயாரிக்கப்பட உள்ளது.

கான்செப்ட் மாடலில் இருந்து கிரியோன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வடிவமைக்கும் பணிகளில் சுமார் 500 பொறியியலாளர்கள் ஈடுப்பட்டு வருகிறார்களாம். 2018 ஆட்டோ எக்ஸ்போவில் டிவிஎஸ் கிரியோனில் 12 கிலோவாட்ஸ் லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டது.

0-வில் இருந்து 60kmph வேகத்தை 5.1 வினாடிகளில் எட்ட உதவும் இந்த பேட்டரியை குறைவான நேரத்தில் சார்ஜ் நிரப்ப விரைவான சார்ஜிங் அமைப்பு கிரியோனில் வழங்கப்பட உள்ளது. அதேநேரம் விரைவு சார்ஜிங் அவுட்லெட்களை பயன்படுத்தி இதன் பேட்டரியை 1 மணிநேரத்தில் 80 சதவீதம் நிரப்பிடவிடலாம் என அந்த நேரத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 80கிமீ ரேஞ்ச் உடன் கொண்டுவரப்படலாம் எனவும் ஏற்கனவே டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. டிவிஎஸ் பிராண்டில் இருந்து விற்பனையில் இருக்கும் ஐக்யுப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரே மற்ற இ-ஸ்கூட்டர்களை காட்டிலும் பிரீமியம் தரத்திலானதாக விளங்குகிறது.

கிரியோன் அதனை காட்டிலும் சற்று காஸ்ட்லீயான வாகனமாக விளங்கலாம். இதனால் ஐக்யுப்பை காட்டிலும் இதன் விலை சற்று அதிகமாகவே நிர்ணயிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் செயல்திறன்மிக்க ஏத்தர் 450எக்ஸ் இ-ஸ்கூட்டர் டிவிஎஸ் கிரியோனுக்கு முக்கிய போட்டி மாடலாக விளங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக