Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 21 ஜூலை, 2021

திடீரென வாட்ஸ்அப் அறிமுகம் செய்த புதிய அம்சம்: இனி உங்கள் விருப்பம் தான் முக்கியம்.! அப்படியென்ன புதிய அம்சம்?

 'Join' மற்றும் 'Ignore' விருப்பம் என்ன செய்யும்?வாட்ஸ்அப் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பயனர்கள் குழு குரல் அழைப்பு அல்லது குழு வீடியோ அழைப்பைத் தொடங்கியவுடன் சேர அனுமதிக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. ஜாயினபிள் கால் அம்சம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அம்சம் பயனர்களை 'கால்ஸ்' டேப்கலுக்குச் செல்வதன் மூலம் குழு அழைப்புகளில் நேரடியா சேர அனுமதிக்கிறது. குழு அழைப்புகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே நீங்கள் அந்த அழைப்பில் இணையலாம் என்பதே சிறப்பு.
 
திடீரென வாட்ஸ்அப் அறிமுகம் செய்த புதிய அம்சம்

இந்த அம்சம் ஒரு புதிய அழைப்பு தகவல் திரையையும் கொண்டுவருகிறது. இது அழைப்பில் யார் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கப் பயனர்களை அனுமதிக்கிறது. மேலும் இதுவரை சேராத அழைக்கப்பட்ட பயனர்களின் தகவலையும் காண்பிக்கிறது. "குழு அழைப்பு தொடங்கும் போது அதற்குப் பதிலளிக்கும் சுமையை இது குறைக்கிறது, மேலும் வாட்ஸ்அப்பில் குழு அழைப்புக்குத் தனிப்பட்ட உரையாடல்களின் தன்னிச்சையையும் எளிமையையும் இது தருகிறது" என்று நிறுவனம் தனது வலைப்பதிவில் கூறியுள்ளது.

இனி எந்தவித சிக்கலும் இல்லாமல் உங்கள் விருப்பம் போல அழைப்புகளில் சேரலாம்

புதிய புதுப்பிப்புக்கு முன், அழைப்பு வருவதைத் தவறவிட்ட பயனர்கள் அழைப்பாளரை மீண்டும் சேர்க்குமாறு கேட்க வேண்டி இருந்தது, ஆனால் இந்த முறை அப்படி எதையும் நீங்கள் செய்ய வேண்டியது இல்லை. அதேபோல், பின்னர் அழைப்பில் சேர யாராவது சாத்தியமாக்கியிருந்தாலும், அவர்களை நடைபெறும் அழைப்புடன் சேர்ப்பது என்பது மிகவும் சிரமமாக இருந்தது. இனி அப்படி எந்தவித சிக்கலும் இல்லாமல் சுலபமாக மக்கள் குழு அழைப்புகளைப் பயன்படுத்தலாம்.

ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கு புது அப்டேட்

புதிய அம்சம் பயனர்கள் குழு அழைப்பில் எப்போது சேர விரும்புகிறீர்கள் என்பதைத் தீர்மானிக்க விட்டுவிடுகிறது. மேலும், பயனர்கள் ஏற்கனவே இருக்கும் அழைப்பிலிருந்து விலகிக்கொள்ளவும் இது அனுமதிக்கிறது. அழைப்பு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தால் வெளியே சென்ற நபர் மீண்டும் குழு அரட்டையில் சேர இது அனுமதிக்கிறது. இந்த புதிய அப்டேட் இது விரைவில் அனைத்து ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களுக்கும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

'Join' மற்றும் 'Ignore' விருப்பம் என்ன செய்யும்?

குழு அழைப்புகளைச் செய்வது முன்பு போலவே எளிதானது, ஆனால் பயனர்கள் அழைப்பிற்கு அழைக்கப்படும்போது புதிய அறிவிப்பு நோட்டிபிகேஷன் தகவலைப் பெறுவார்கள். குழு அழைப்பிற்குப் பயனர்கள் அழைக்கப்படும்போது பயனர்கள் இப்போது 'Join' மற்றும் 'Ignore' என்ற இரண்டு விருப்பங்களைக் காண்பார்கள். Join என்பதை கிளிக் செய்தல் நீங்கள் நேராக அழைப்பிற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அதேபோல், Ignore தேர்ந்தெடுப்பதன் மூலம் அந்த அழைப்பை நீங்கள் நிராகரிக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக