ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக வோடபோன் ஐடியா நிறுவனம் தொடர்ந்து சிறப்பான திட்டங்கள் மற்றும் அசத்தலான சலுகைகளை வழங்கிய வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதன்படி இந்நிறுவனம் தற்போது ரூ.267 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
குறிப்பாக இந்த புதிய திட்டம் வரம்பற்ற டேட்டா நன்மைகளை வழங்கும் திட்டம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் டேட்டா நன்மைகள் மட்டுமின்றி வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் நன்மைகள் வழங்கப்படுகிறது. என்பது குறிப்பிடத்தக்கது.
வோடபோன் ஐடியா ரூ.267 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரூ.267 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது டெய்லி டேட்டா வரம்பு இல்லாமல் 25 ஜிபி அளவிலான அதிவேக தரவை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள்,தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகின்றன.
குறிப்பாக ரூ.267 ப்ரீபெய்ட் திட்டத்தில் Vi மூவிஸ் மற்றும் டிவி கிளாசிக் அணுகலும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக