டெக்னோ ஸ்பார்க் கோ 2021 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஆதரவு, இரட்டை பின்புற கேமரா அமைப்பு, மீடியா டெக் ஹீலியோ ஏ20 எஸ்ஓசி ஆதரவோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் இரட்டை பின்புற கேமரா அமைப்பு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் விலை மற்றும் அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
டெக்னோ ஸ்பார்க் கோ 2021
டெக்னோ ஸ்பார்க் கோ 2021 சாதனமானது நுழைவு நிலை ஸ்மார்ட்போன் பிரிவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ஒற்றை ரேம் மற்றும் உள்சேமிப்பு வசதியோடு வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது மூன்று வண்ண விருப்பங்களில் வருகிறது. ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 கோ பதிப்பு ஆதரவோடு இயங்குகிறது. மேலும் இது மெலிதான பெசல்களுடன் வருகிறது. இது பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பு மற்றும் முன்பக்கத்தில் செல்பி கேமரா அமைப்பு இருக்கிறது. டெக்னோ ஸ்பார்க் கோ 2019, டெக்னோ ஸ்பார்க் கோ 2020 மாடலின் வாரிசாக டெக்னோ ஸ்பார்க் கோ 2021 இருக்கிறது.
டெக்னோ ஸ்பார்க் கோ 2021: விலை
டெக்னோ ஸ்பார்க் கோ 2021 ஸ்மார்ட்போனானது கேலக்ஸி ப்ளூ, ஹரிஜான் ஆரஞ்ச் மற்றும் மால்தீவ்ஸ் ப்ளூ வண்ண விருப்பங்களில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனானது 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இதன் விலை ரூ.7,299 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஜூலை 7 மதியம் 12 மணி முதல் அமேசான்.காம் தளத்தில் கிடைக்கும். ஆரம்ப சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் ரூ.6,699-க்கு வழங்கப்படுகிறது. ஆரம்ப இருப்பு முடியும் வரை மட்டுமே இந்த சலுகை என கூறப்படுகிறது.
டெக்னோ ஸ்பார்க் கோ 2021 சிறப்பம்சங்கள்
டெக்னோ ஸ்பார்க் கோ 2021 ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்ட் 10 (கோ பதிப்பு) ஆதரவோடு இயங்குகிறது. இது இரட்டை சிம் ஆதரவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (720x1,600 பிக்சல்கள்) ஆதரவோடு வருகிறது. டாட் நாட்ச் டிஸ்ப்ளே, 20: 9 விகித ஆதரவோடு 480 நைட் பீக் பிரகாச உச்சநிலை வரம்பை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவாட் கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ20 எஸ்ஓசி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு இயக்கப்படுகிறது. மேலும் 256 ஜிபி வரை மெமரி விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் ஆதரவு இதில் இருக்கிறது.
இரட்டை பின்புற கேமரா அமைப்பு
டெக்னோ ஸ்பார்க் கோ 2021 ஸ்மார்ட்போன் இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா வசதியை கொண்டுள்ளது. மேலும் இதில் இருக்கும் இரண்டாம் நிலை கேமராவுக்கான விவரங்கள் தெரியவில்லை. அதேபோல் முன்பக்கத்தில் செல்பி வசதிக்கென 8 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இணைப்பு ஆதரவுகள்
டெக்னோ ஸ்பார்க் கோ 2021 ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, இதில் 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி4.2 ஆகிய வசதிகள் உள்ளது. பாதுகாப்பு வசதிக்கென பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளது. டெக்னோ ஸ்பார்க் கோ 2021 ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியோடு வருகிறது. மேலும் இதில் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இருக்கிறதா என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை.
மொபைல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக