Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 2 ஜூலை, 2021

இனி OTP மெசேஜ்கள் தானாக டெலீட் ஆகும்.. கால அவகாசம் இனி இவ்வளவு மட்டும் தான்..

கூகுள் நிறுவனம் தற்போது அதன் மெசேஜ்ஜஸ் பயன்பாட்டிற்கான புதிய அப்டேட்டை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. புதிய அப்டேட்டுகள் மூலம் தனிப்பட்ட செய்திகள் மற்றும் விளம்பர செய்திகளை யூசர்கள் தனித்தனியாகப் பிரித்து பார்வையிட முடியும். இதன் மூலம் DOTP போன்ற பல வகையான மெசேஜ்களை இனி பயனர்கள் வரிசைப்படுத்தி எளிமையாகப் பயன்படுத்த இந்த புதிய அப்டேட் அனுமதிக்கும் என்று கூகிள் நிறுவனம் கூறியுள்ளது.

OTP மெசேஜ்கள் இனி தானாக டெலீட் செய்யப்படும்

இந்த புதிய அப்டேட்டில் கவனிக்க வேண்டிய முக்கிய மாற்றமே உங்களின் OTP மெசேஜ்கள் இனி தானாக டெலீட் செய்யப்படும் என்பது தான். ஒரு முறை கடவுச்சொல் என்ற OTP எண்கள் கொண்ட மெசேஜ்களை இனி மெசேஜ்ஜஸ் ஆப்ஸ் தானாக நீக்கும் என்று கூகுள் தெரிவித்துள்ளது. இந்த OTP மெசேஜ்கள் உங்கள் மெசேஜ்ஜஸ் ஆப்ஸ் இல் அதிகம் சேராமல் இருக்க இந்த அம்சம் உதவும். உங்கள் OTP அடங்கிய மெசேஜ்கள் 24 மணி நேரத்திற்குப் பிறகு தானாக டெலீட் செய்யும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

யாருக்கெல்லாம் இந்த அம்சம் கிடைக்கும்?

இது குறித்து விளக்கிய கூகுள் நிறுவனம், இந்த புதிய அப்டேட்டுகள் உங்கள் செய்திகளை எளிதாக நிர்வகிக்க உதவும் என்றும், இந்த புதிய அப்டேட் அண்ட்ராய்டு 8 மற்றும் அதற்கு மேல் உள்ள வெர்ஷன்களில் சிறப்பாகச் செயல்படும் என்றும் கூறியுள்ளது. இந்திய பயனர்களுக்கு இந்த புதிய அப்டேட் வரும் வாரத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த புதிய அப்டேட்டை விருப்பம் உள்ளவர்கள் மட்டும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

யூசர்களின் மெசேஜ்களை வேறுயாரும் இனி படிக்க முடியாது

அதுமட்டுமின்றி, கூகிள் மெசேஜ்ஐஸ் ஆபிசில் பாதுகாப்பு அம்சமும் இந்த இந்த புதிய சாப்ட்வேர் அப்டேட் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது என்று கூகிள் தெரிவித்துள்ளது. அதேபோல், கூகுள் தரப்பில் இருந்து வேற்று நபர்கள் யாரும் யூசர்களின் மெசேஜ்களை படிக்க முடியாது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்னும் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் இந்த புதிய அப்டேட் இந்திய யூசர்களுக்கு அடுத்த வரம் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து செயல்படும் கூகிள்

கூகிள் நிறுவனம் சமீபத்தில் தனது ஆப்ஸ்களில் பல புதிய மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இதில் பல ஆப்ஸ்களில் நிறுவனம் தனது பயனர்களின் பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்த முயற்சித்து வருகிறது என்று தெரிகிறது. பயனர்களின் அனுபவத்தை மேலும் அதிகரித்து மேம்படுத்த நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக