சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி,லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு சாதனமும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவருவதால் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.
சியோமி டிவிகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்
இந்நிலையில் சியோமி ஸ்மார்ட் டிவிகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி இன்று (ஜூலை 1) முதல் எங்கள் ஸ்மார்ட் டிவிகளின் விலை தவிர்க்க முடியாமல் 3-6 சதவீதம் அதிகரிக்கும் என சியோமி செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
குறிப்பாக அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் கப்பல் கட்டணங்கள் காரணமாக ஸ்மார்ட் டிவிகளின் விலையை அதிகரித்துள்ளது சியோமி நிறுவனம். மேலும் ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.500 வரை அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஸ்மார்ட்போன்களின் டிஸ்பிளே பேனல்களின் விலையை அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு கூடுதலாக, சிப்செட்களின் விலை 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில் பேட்டரி பேக் செலவு 10 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், கேமரா modules மற்றும் சென்சார்கள் 5 சதவீதம் உயர்ந்துள்ளன.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பல நிறுவனங்கள் ஸ்மார்ட் டிவிகளின் விலையை 10 முதல் 12 சதவிகிதம் அதிகரித்துள்ளன. குறிப்பாக சீன நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் டிவிகளின் விலை உயர்த்தப்படுவதால் மக்கள் மற்ற நாடுகளின் டிவிகளை வாங்க அதிக ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக