Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 2 ஜூலை, 2021

இனிமேலும் லாக்டவுன் போட்டால் அவ்வளவு தான்.. ராகுல் பஜாஜ் அதிரடி..!

இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான பஜாஜ் ஆட்டோ குழுமத்தின் முன்னாள் தலைவரான ராகுல் பஜாஜ் பங்குதாரர்களுக்கு எழுதிய கடித்ததில் லாக்டவுன் குறித்தும், நாட்டின் வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தகம் குறித்து முக்கியமான தகவல் அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று

இந்தியாவில் கொரோனா தொற்றை முறையாகக் கட்டுப்படுத்தால் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் மூலம் நாட்டின் வர்த்தகம், வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தை அழித்துவிட்டது என ராகுல் பஜாஜ் ஏப்ரல் 29ஆம் தேதி அனுப்பியுள்ளார். தற்போது பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஜூன் 30ஆம் தேதி தனது வருடாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வர்த்தகம், வேலைவாய்ப்பு, பொருளாதாரம்

இதேபோல், கடந்த முறை போல இந்த முறை கடுமையாகக் கட்டுப்பாடுகள் உடன் லாக்டவுன் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. மார்ச் 25 முதல் ஏப்ரல் 30, 2020 வரையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நாட்டின் வர்த்தகம், வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தை மொத்தமாக அழித்துவிட்டது.

லாக்டவுன் தளர்வுகள்

அதன் பின்பு நவம்பர் 30 வரையில் படிப்படியாக அறிவிக்கப்பட்ட லாக்டவுன் தளர்வுகள் வர்த்தகத்தைத் திரும்பவும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வரப் பெரிய அளவில் உதவியுள்ளது என்றால் மிகையில்லை.

வாழ்த்துக்கள்

இதேபோல் ராஜீவ் பஜாஜ் தலைமையில் பஜாஜ் ஆட்டோ கடந்த ஆண்டின் மோசமான வர்த்தகச் சூழ்நிலையிலும் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது. இதற்கு அனைத்து ஊழியர்களுக்கும், நிர்வாகக் குழுவிற்கும் வாழ்த்துக்கள் என ராகுல் பஜாஜ் தெரிவித்துள்ளார்.

வேக்சின் முக்கியம்

மேலும் இந்தியாவில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த லாக்டவுன் பெரிய அளவில் உதவவில்லை என்பதை உணர்த்தும் பல சான்றுகள் கிடைத்துள்ளது. இதேபோல் முறையாக அனைவருக்கும் வேக்சின் அளிப்பதே சிறந்த வழி. இந்நிலையில் இனிமேலும் லாக்டவுன் விதித்தால் நாட்டின் நிலை மிகவும் மோசமான நிலையை அடையும் என ராகுல் பஜாஜ் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக