இந்தியாவில் ரெட்மோட்டோ எக்ஸ்இவி மின்சார இருசக்கர வாகனங்களுக்கான முன்பதிவு தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
சத்திஷ்கர் மாநிலத்தை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன உற்பத்தி நிறுவனம் ரெட்மோட்டோ எக்ஸ்இவி. இந்த நிறுவனமே இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் தனது கால் தடத்தை பதிக்கும் வகையில் மூன்று புதுமுக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான முன்பதிவை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மே மாதம் அனைத்து மின் வாகனங்களையும் நிறுவனம் வெளியீடு செய்திருந்தநிலையில் தற்போது அவற்றிற்கான புக்கிங்கை ஆரம்பிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, நாளை (ஜூலை 2) முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கான புக்கிங் நாட்டில் தொடங்கப்பட இருக்கின்றது.
ரூ. 4,999 என்ற முன்தொகையில் ப்ரீ புக்கிங் தொடங்கப்பட்டிருக்கின்றது. இதற்கான லிங்க் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் கிடைக்கும் எனவும் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இதன் வாயிலாக புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு முன்பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து சரியாக 3 மாதத்திற்குள் வாடிக்கையாளர்களுக்கு மின்சார இருசக்கர வாகனம் டெலிவரி கொடுக்கப்படும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.
ஆகையால், நிறுவனத்தின் முதல் பேட்ஜ் மின்சார இருசக்கர வாகனங்கள் நவம்பர் மாதத்திற்குள் அதன் உரிமையாளர்களைச் சென்று சேரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரண்டு மின்சார ஸ்கூட்டர் மற்றும் ஒரு மின்சார பைக்கையே நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆர்எக்ஸ் மற்றும் ஆர்3எக்ஸ் ஆகிய பெயர்களில் ஸ்கூட்டர்களும், ஆர்5எக்ஸ் என்ற பெயரில் மின்சார பைக்கும் விற்பனைக்குக் கிடைக்கும். முன்னோட்டமாக இந்தியாவின் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்கள் கிடைக்க இருக்கின்றது.
அந்தவகையில், சென்னை, புனே, பெங்களூரு, நொய்டா, பிரயாக்ராஜ், லக்னோ, ஜெய்பூர், இந்தூர், புவனேஸ்வர், போபால், பிலஸ்பூர், ராஞ்சி, ராய்பூர், கவுகாத்தி மற்றும் புதுடில்லி ஆகிய நகரங்களிலேயே ரெட்மோட்டோ எக்ஸ்இவி மின்சார வாகனங்கள் கிடைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்த நகரங்களில் எலெக்ட்ரிக் வாகனம் விற்பனைக்கு வந்திருப்பதைத் தொடர்ந்து டெஸ்ட் டிரைவ் போன்றவற்றை வழங்க நிறுவனம் முயற்சிகள் எடுத்து வருகின்றது. இந்தியாவில் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக ஃபேம்2 திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மானியத்தை அதிகரித்திருக்கின்றது.
ஆகையால், ரெட்மோட்டோ எக்ஸ்இவி மின்சார இருசக்கர வாகனங்கள் இந்தியர்கள் மத்தியில் கணிசமான வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னதாக மின்சார இருசக்கர வாகனங்களுக்கு ஃபேம்2 திட்டத்தின்கீழ் ரூ. 10 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டது. இதனையே ரூ. 15 ஆயிரமாக அண்மையில் ஒன்றிய அரசு உயர்த்தியது.
ஆட்டோமொபைலும் - பங்குச்சந்தையும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக