குஜராத் மாநிலம் வதோதரா பகுதியைச் சேர்ந்தவர் வர்சங்பாய் பரியால்சோ. இவர் விவசாயியாக இருந்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனிற்கு வந்து தன்னை இரண்டு பேய்கள் துரத்துவதாகவும், அவரை கொலை செய்வதாக மிரட்டுவதாகவும், பேய்களிடமிருந்து தன் உயிரை காப்பாற்றும்படியும் புகார் கடிதம் ஒன்றை எழுதி கொடுத்துள்ளார்.
அவர் எழுது கொடுத்த புகாரின் படி: "நான் எனது நிலத்தில் விவசாய வேலை செய்து கொண்டிருந்த போது அங்கு இரண்டு பேய்கள் வந்து என்னை கொல்லப்போவதாக மிரட்டின. நான் பயந்து போய் குடிசைக்கு வந்தேன். அது தொடர்ந்து என்னை மிரட்டிக்கொண்டேயிருக்கிறது. என் உயிரை அது பறித்துவிடுமோ என பயமாக இருக்கிறது. என் உயிரை காப்பாற்றுங்கள்" என குறிப்பிட்டிருந்தார்.
இதை படித்ததும் போலீசாருக்கு இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற எண்ணம் வந்தது. இதையடுத்து அவர்கள் வர்சங்பாயின் குடும்பத்தினருக்கு போன் செய்து அவர் போலீஸ் ஸ்டேஷன் வந்திருக்கும் தகவலை சொன்னார்கள். அவர்களுக்கு இவர் போலீஸ் ஸ்டேஷன் சென்ற விஷயமே தெரியவில்லை. அவர்கள் உடனடியாக போலீஸ் ஸ்டேஷன் வந்தனர்.
அவர்கள் போலீஸ் ஸ்டேஷன் வந்த பின்பு தான் உண்மையே தெரிந்தது வர்சங்பாய் சில மாதங்களாக சைக்கியாட்ரிஸ்ட் மருத்துவரிடம் ட்ரீட்மெண்ட் எடுத்து வருகிறார். அவர்கள் இவருக்கு மாத்திரை கொடுத்து வந்துள்ளனர். கடந்த 10 நாட்களாக இவர் அந்த மாத்திரையை சாப்பிடவில்லை அதனால் இவர் குழப்ப நிலையில் கற்பனைக்கு சென்று விடுகிறார். அந்த கற்பனையையும் நிஜத்தையும் போட்டு குழப்பிக்கொள்கிறார். என தெரிந்தது. இதையடுத்து போலீசார் வர்சங்பாயிடம் பேசி அவரது அவரது உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர்.
தன்னை பேய் தொல்லை செய்வதாக ஒருவர் போலீசிடம் புகார்அளித்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்த உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள்
உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக